18

siruppiddy

பிப்ரவரி 28, 2015

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்???

 யாழில் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் கைது- யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் உள்ளிட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பிலான தகவல்களை மறைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதிரனலாகே விமலசேன மற்றும் அல்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ராஜகருணா ஆகியோரே...

பிப்ரவரி 25, 2015

கையெழுத்துப் போராட்டத்த ஆரம்பித்து ஆயர்!

தமிழ் சிவில் சமூக அமையத்தின் கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார் மன்னார் ஆயர்!  இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதைக் கண்டித்து, தமிழ் சிவில் சமூக அமையம் நேற்று கையெழுத்துப் பெறும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.முதலாவது கையெழுத்தை இட்டு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையகத்தி ன் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதற்கு எதிர்ப்பும்...

பிப்ரவரி 18, 2015

போர்க் குற்றவாளிகள் தப்புவதற்கு வாய்ப்பு அளித்துவிடக் கூடாது!!¨¨

ஐ.நா. அறிக்கை தாக்கல் ஆவது தாமதம்: போர்க் குற்றவாளிகள் தப்புவதற்கு வாய்ப்பு அளித்துவிடக் கூடாது சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு வேண்டுகோள் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணை மீதான அறிக்கை தாக்கல் செய்வதை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் 6 மாதங்கள் தள்ளி வைத்துள்ளது. இது குறித்து சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பின் (ஆம்னெஸ்டி இன்டர்நேசனல்) இந்திய திட்ட இயக்குனர் ஷெமீர்பாபு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இலங்கையில் நடந்த உச்சக்கட்ட...

பிப்ரவரி 17, 2015

மோடியுடன் ஐ.நா விசாரணை அறிக்கை குறித்து மைத்திரிபால பேச்சு!!!

 புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியாக நடத்தவுள்ள 45 நிமிடப் பேச்சுக்களின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கை குறித்து விரிவாக ஆராயப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற மற்றும் மனித உரிமைகள் அறிக்கையை இந்தியாவும் கூட அதிகமாக கவனித்து வருகிறது. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், கொழும்புடன் இந்தியா நெருக்கமான...

பிப்ரவரி 16, 2015

ஆணைக்குழுவின் நிபுணர்களுக்கு 400 மில்லியன் செலவு!!!

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவிற்கு மகிந்தவினால் நியமிக்கப்பட்ட நான்கு நிபுணர்களுக்காக, 400 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் சிறிலங்காவில் எந்த பணிகளையும் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழு யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யும் என்று சர்வதேசத்தை நம்ப வைப்பதற்காக, மகிந்தராஜபக்ஷவினால் அதற்கு நான்கு வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டார்கள்.  அவர்களுக்கு...

பிப்ரவரி 13, 2015

விசாரணை சர்வதேச தரத்தைக் கொண்டிருக்க வேண்டும்!

சிறிலங்காவின் உள்ளக விசாரணைகள் சர்வதேசத் தரத்தைக் கொண்டதாக அமைய வேண்டும் என்பதில், ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்ரீவன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் ஜனநாயகம், அமைதி மற்றும் பொறுப்புக் கூறுதல் செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைக்கும். இந்த விடயத்தின் அடிப்படையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது. இதற்கு...

பிப்ரவரி 11, 2015

மத்திய அரசு இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது !???

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இறுதிகட்டப் போரின்போது ஏராளமானத் தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே என அவர் கூறுகிறார். அச்சமயத்தில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும்...

பிப்ரவரி 09, 2015

அறிவிப்பு! வலி.வடக்கினில் சில பகுதிகள் விடுவிப்பு!!??

 வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் எந்தப் பகுதிகளை நூறுநாள் திட்டத்தினுள் விடுவிக்க முடியும் என்பது தொடர்பில், இராணுவத்தினர் எதிர்வரும் பத்து நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் பின்னர் அந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என புதிய அரசு தெரிவித்துள்ளது. வலி.வடக்கின் ஒரு பகுதியை முதல் கட்டமாக இந்த வாரத்துக்குள் விடுவிப்பதற்கு கொழும்பு அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளது. தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயம்...

பிப்ரவரி 06, 2015

தேடப்படும் விடுதலைப்புலி குமரன் பத்மநாபன் வெளிநாடு செல்ல தடை?

  விடுதலைப்புலி குமரன் பத்மநாபன் வெளிநாடு செல்ல தடை? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்தியாவால் தேடப்படும் விடுதலை புலிகள் இயக்க  குமரன் பத்மநாபன் வெளிநாடு செல்ல தடை விதித்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது. ராஜீவ் கொலையில் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வந்த போர் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதில் விடுதலைப்புலிகள் இயக்கம் முறியடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். இதனைத்...

பிப்ரவரி 05, 2015

இன்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் !

ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கத்தினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின்  மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடும் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகும் இந்த விவாதம் நாளையும், நாளை மறுதினமும் தொடர்ந்தும் நடைபெறும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் சனிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளதாகவும் சிங்கள...

பிப்ரவரி 04, 2015

சிறிய குற்றங்களை செய்த சிறைக் கைதிகள் விடுதலை..

சுதந்திர தினத்தையொட்டி மட்டு.சிறைச்சாலையிலிருந்து 14 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3 பெண்களும் 11 ஆண்களும் இவ்வாறு விடுவிக்கப்பட்டனர். சிறிய அளவான குற்றங்களை செய்தவர்கள் தண்டப்பணம் செலுத்தாதவர்கள் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள்  போன்றோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ஏ.பிரியங்கர தலைமையில இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றிருந்தது இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

பிப்ரவரி 01, 2015

வருகிறார் மீண்டும் ராஜபக்ஸ..!! லெட்டர் ஹெட் கட்சிகளோடு இணைந்து போட்டி

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷ புதிய அரசியல் கட்சியொன்றின் ஊடாக தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்றின் கீழ் சில அரசியல் கட்சிகள் போட்டியிடத் தீர்மானித்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் சில கட்சிகளின் தலைவர்கள் இந்த திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ...