18

siruppiddy

அக்டோபர் 29, 2015

மேலும் மஹிந்தவின் ஒரு நிலத்தின்கீழ் மாளிகை கண்டுபிடிப்பு!!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மாளிகை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அமைக்கப்பட்ட பதுங்கு குழி என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான நிலக்கீழ் மாளிகை ஒன்று அலரி மாளிகையினுள் உள்ளதாக அபயராமையில் வைத்து அவர் குறிப்பிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ச கூறும் வகையில் மேலும் ஒரு நிலக்கீழ் பதுங்கு குழி தெனியாய, நாதகல தோட்டத்தில்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அங்கு...

அக்டோபர் 25, 2015

மைத்திரி இயற்கையின் சீற்றத்தில் சிக்கிய காட்சி

இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடை மழை காரணமாக ஏற்பட்ட சேற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிக்கிக் கொண்ட சம்பவம்  இடம்பெற்றுள்ளது. களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்த வேளையில், ஜனாதிபதியின் வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை வாகனத்தில்...

அக்டோபர் 24, 2015

பாலச்சந்திரன் ,சரணடைய வந்தவர்கள், கொலைகளுக்கு உயர்மட்ட உத்தரவே காரணம்!!!

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு இருக்கவில்லை. உயர்மட்டத்தில் இருந்து  பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படியே அவ்வாறு நடைபெற்றது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான...

அக்டோபர் 22, 2015

. போர்க்குற்றத்தில் இலங்கை ராணுவம்ஈடுபட்டது உண்மை தான்?

இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரின்போது இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மை தான் என்பது இலங்கை நடத்திய உள்நாட்டு விசாரணை குழுவின் அறிக்கையில்  தெரியவந்துள்ளது. இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே என்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகளும் உண்மைதான் என்றும் இது தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில்...

அக்டோபர் 20, 2015

கோரக்கன்கட்டு மயானத்தில்தமிழினியின் புகழுடல் விதைப்பு!!!

விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறை முன்னாள் பொறுப்பாளர் தமிழினியின் இறுதி நிகழ்வுகள் இன்று பரந்தன் சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. பெருமளவான மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இறுதி வணக்கம்  செலுத்தினர். முன்னதாக அவரது இல்லத்தில் எழுத்தாளர் வெற்றிச்செல்வி தலைமையில் வணக்கக்கூட்டம் இடம்பெற்றது.இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு முதலமைச்சர் சார்பாக அமைச்சர் ஐங்கரநேசன், முன்னாள் போராளியும் எழுத்தாளருமான தமிழ்க்கவி...

அக்டோபர் 19, 2015

பூதவுடல் தமிழினியின் இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது! [ நிழல் படங்கள் இணைப்பு]

தாயகத்தில் இன்று புற்றுநோய் காரணமாக சாவினை தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளரான தமிழினி என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, தமது 43ஆவது வயதில் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இயற்கையெய்தினார். நீண்டநாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அன்னார், மஹரகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார். தற்போது...

அக்டோபர் 18, 2015

முன்னாள் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி மரணம் !

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி சிவசுப்பிரமணியம்) சுகவீனம் காரணமாக சாவடைந்தார்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1991இல் இணைந்து கொண்ட தமிழினி, தனது கவனிக்கத்தக்க பங்களிப்புக்களின் ஊடாக மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளரானார். 2009 இறுதிப்போரின் பின்னர் முள்வேலி முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழினி 2013ஆம் ஆண்டில் வவுனியாவில் வைத்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். கடந்த...

அக்டோபர் 14, 2015

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் முதல்–மந்திரி கோரிக்கை

இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல தமிழ் அரசியல் தலைவர்களை இலங்கை அரசு விசாரணை இன்றி  கைது செய்து  சிறையில் அடைத்தது. 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் தங்களுக்கு இலங்கை அதிபர் மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும், இதனை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் இலங்கை...

அக்டோபர் 12, 2015

முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்போதே விசாரணைகளைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலைகளுடன்...

அக்டோபர் 11, 2015

யாருடையது காலியில் பிடிபட்ட ஆயுத கப்பல் ?

எல்லைக்குள், சிறிலங்கா கொடியுடன் சென்று கொண்டிருந்த ஆயுதங்களுடன் கூடிய எவன்கார்ட் எனப்படும் கப்பலை கடற்படையினர் தடுத்து வைத்து விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர். கடந்த செவ்வாயன்று இந்த கப்பல் முற்றுகையிடப்பட்டதாகவும்அங்கு அனுப்பப்பட்டுள்ள கடற்படையின் விஷேட விசாரணைக் குழுவொன்று விசாரணைகளை செய்து வருவதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக சில்வா தெரிவித்தார். இந்த கப்பலில் 810 ஆயுதங்கள் இருந்ததாகவும் முதற்கட்டமாக, கப்பலில் உள்ள ஆயுதங்கள்...

அக்டோபர் 10, 2015

எதிர்வரும் வாரம் அரசாங்கத்தின் 20 அமைச்சர், உறுப்பினர்கள் கைதகலாம் ?

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த கிட்டத்தட்ட 20 அமைச்சர்கள், உறுப்பினர்கள் எதிர்வரும் வாரத்தினுள் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு நபர் கொலை, போதைபொருள், எத்தனோல் வியாபாரம், உர மானியம் சுரண்டல், விவசாயிகளின் நஷ்டஈடு பணத்தை சுரண்டல், அரசாங்க நிதியை சுரண்டல் ஆகிய குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அவர்களுக்குள்...

அக்டோபர் 08, 2015

வரலாற்று முக்கியத்துவ1983ம் ஆண்டு தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள்???

1983ம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் சந்தோசம் மாஸ்டரும் ஒருவர். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும். 1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட வாகனமொன்றில்,...

அமெரிக்கா தலைவர் பிரபாகரனிடம் பல லட்சம் கோடி பேரம் பேசியதாம்???

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுடன் 36 இலட்சம் கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளது அமெரிக்கா.ஏன்? எதற்காக…காணொளி இணைப்பு ? இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

அக்டோபர் 07, 2015

மோதல் உக்கிரம்ரணிலுக்கும், மங்களவிர்க்கும் இடையில் !

சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் முறுகல் நிலை முற்றியுள்ளமையை அண்மைக்கால செயற்பாடுகள் எடுத்துக்காட்டுவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே பிரதமரின் ஜப்பானிய விஜயத்தின்போது மங்கள சமரவீர பங்கேற்கவில்லை. மங்கள சமரவீர தலைமையிலான வெளியுறவு சேவை பிரதமரின் கட்டளைகளுக்கு செவிமடுக்காமையே இதற்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு...

அக்டோபர் 06, 2015

பயங்கர நிலையிலிருந்து நாடு விடுபட்டுள்ளது பிரதமர் ரணில்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த, ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான சந்திப்பு ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு பாரிய சிக்கலில் இருந்து விடுபட்டுள்ளதாக தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வௌியிடும்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை...

அக்டோபர் 04, 2015

சொந்த மக்கள் மீது குற்றங்களை புரிந்துள்ளது! ஐ.நா மனித உரிமை பேரவை மதிப்பீடு

இரண்டாம் உலகப்போரின் பின்னர் இலங்கையானது தமிழர், சிங்களவரென்று அல்லாமல் தனது சொந்த மக்கள் மீது கொடிய குற்றங்களை புரிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தனது மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதத்தில் தமிழ் மக்களைப் படுகொலை செய்தமை அவற்றுள் உச்சமானதாகும். இவை சரியாக கணக்கிட முடியாதுள்ளன. 146,679 தனி நபர்கள், 90,000 போர்க்கால விதவைகள், ஆகக் குறைந்தது 25,000 அநாதைப் பிள்ளைகள், சேதமாக்கப்பட்ட 160,000 வீடுகள்...

அக்டோபர் 02, 2015

ரவீனா யோசனையை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்குகிறார்`?

மனித உரிமைகள் ஆணையகத்தின் நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையை அமுலாக்கும் பணிகளில், இலங்கையுடன் மனித உரிமைகள் ஆணையகம் விரிவாக ஒத்துழைத்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையகத்தின் பேச்சாளர் ரவீனா சம்தாசனி, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை, இலங்கைக்கான வரலாற்று ரீதியான வாய்ப்பாக அமையும். இந்த பிரேரணையின் ஊடாக நிலையான அமைதியை ஏற்படுத்தவும்,...