18

siruppiddy

அக்டோபர் 07, 2015

மோதல் உக்கிரம்ரணிலுக்கும், மங்களவிர்க்கும் இடையில் !


சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் முறுகல் நிலை முற்றியுள்ளமையை அண்மைக்கால செயற்பாடுகள் எடுத்துக்காட்டுவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாகவே பிரதமரின் ஜப்பானிய விஜயத்தின்போது மங்கள சமரவீர பங்கேற்கவில்லை.
மங்கள சமரவீர தலைமையிலான வெளியுறவு சேவை பிரதமரின் கட்டளைகளுக்கு செவிமடுக்காமையே இதற்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு முதல் தடவையாக சென்று திரும்பிய பின்னர் அவரின் விஜயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியுறவு அமைச்சு கையளித்தது.
இந்த அறிக்கை க.பொ.த சாதாரணதரத்தில் பயிலும் ஒருவர் எழுதுவதைக் காட்டிலும் மோசமாக இருந்ததாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியிருந்தார்.
எதிர்காலத்தில் இந்த நிலைமை இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமது வெளிநாட்டு விஜயத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சில் இருந்து யாரும் பங்கேற்கக்கூடாது என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இதன்படியே அவரின் ஜப்பான் விஜயத்தின் போது வெளியுறவு அமைச்சில் இருந்து யாரும் அழைத்துச்செல்லப்படவில்லை.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் ஜெனீவா வதிவிடப்பிரதிநிதி
 ரவிநா்த ஆரியசிங்க 30வது ஜெனீவா அமர்வின்போது அங்கு நடக்கும் தகவல்களை இலங்கையில் உள்ள இருவருக்கு இரகசிய தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
ஆரியசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸ் மற்றும் தயான் ஜெயதிலக்க ஆகியோரின் நெருங்கிய நண்பராவார்.
இந்தநிலையில் கடந்த மாதங்களில் மங்களவுடனும் சிறந்த உறவை அவர் கொண்டிருந்தார்.
இதனைதவிர மங்கள சமரவீரவுக்கு வெளியுறவு அமைச்சுக்கு மேலதிக தொலைத்தொடர்புகள் அமைச்சு வழங்கப்படுவதாக இருந்தபோதும் பின்னர் அது மறுக்கப்பட்டது.
இந்த காரணங்களே ரணிலுக்கும் அவருக்கும் முரண்பாடுகளை வளர்த்துள்ளன என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கையில் வெளிவிவகார அமைச்சு இல்லை 
என்பதை உணர்ந்தே தான் செயற்படுவதாக ஜப்பான் சென்று திரும்பிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிட்டு நோக்கத்தக்கது.
அத்துடன், வெளிவிவகார அமைச்சின் சேவை திருத்தி 
அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளமையானது, பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான உறவின் சிக்கலை மேலும் தெளிவுபடுத்துகின்றமையை அவதானிக்க
 முடிகின்றது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>



  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக