18

siruppiddy

அக்டோபர் 25, 2015

மைத்திரி இயற்கையின் சீற்றத்தில் சிக்கிய காட்சி

இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடை மழை காரணமாக ஏற்பட்ட சேற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிக்கிக் கொண்ட சம்பவம்
 இடம்பெற்றுள்ளது.
களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்த வேளையில், ஜனாதிபதியின் வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை வாகனத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி அழைத்துச் சென்றனர்.
பின்னர் சேற்றில் சிக்கிய வாகனத்தை, சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டெடுத்தனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக