எல்லைக்குள், சிறிலங்கா கொடியுடன் சென்று கொண்டிருந்த ஆயுதங்களுடன் கூடிய எவன்கார்ட் எனப்படும் கப்பலை கடற்படையினர் தடுத்து வைத்து விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
கடந்த செவ்வாயன்று இந்த கப்பல் முற்றுகையிடப்பட்டதாகவும்அங்கு அனுப்பப்பட்டுள்ள கடற்படையின் விஷேட விசாரணைக் குழுவொன்று விசாரணைகளை செய்து வருவதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக சில்வா தெரிவித்தார்.
இந்த கப்பலில் 810 ஆயுதங்கள் இருந்ததாகவும் முதற்கட்டமாக, கப்பலில் உள்ள ஆயுதங்கள் தொடர்பான பதிவுகள் முறையாகப் பேணப்பட்டுள்ளதா, அவற்றுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அதன்பின்னரேயே மேலதிக தகவல்களை வெளிப்படுத்த முடியும் எனவும் கடற்படை
தெரிவித்துள்ளது..
கப்பல் மாலுமயினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சில குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக