18

siruppiddy

அக்டோபர் 14, 2015

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் முதல்–மந்திரி கோரிக்கை


இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல தமிழ் அரசியல் தலைவர்களை இலங்கை அரசு விசாரணை இன்றி 
கைது செய்து
 சிறையில் அடைத்தது. 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் தங்களுக்கு இலங்கை அதிபர் மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும், இதனை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரன், அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் அவர், ‘இலங்கையில் உள்ள பல சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள 200–க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக 
விடுவிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் 
சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்கள். ஆனால் 
இதுவரை அவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக