விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறை முன்னாள் பொறுப்பாளர் தமிழினியின் இறுதி நிகழ்வுகள் இன்று பரந்தன் சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. பெருமளவான மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இறுதி வணக்கம்
செலுத்தினர்.
முன்னதாக அவரது இல்லத்தில் எழுத்தாளர் வெற்றிச்செல்வி தலைமையில் வணக்கக்கூட்டம் இடம்பெற்றது.இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு முதலமைச்சர் சார்பாக அமைச்சர் ஐங்கரநேசன், முன்னாள் போராளியும் எழுத்தாளருமான தமிழ்க்கவி கல்வி அமைச்சர் குருகுலராசா,
முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் வணக்க உரைகளை ஆற்றினர்.
பின்னர், பிற்பகல் 2 மணியளவில் பரந்தன் - முல்லை வீதியில்
தமிழினியின்
புகழுடல், அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோரக்கன்கட்டு மயானத்தில் விதைக்கப்பட்டது.


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக