18

siruppiddy

அக்டோபர் 10, 2015

எதிர்வரும் வாரம் அரசாங்கத்தின் 20 அமைச்சர், உறுப்பினர்கள் கைதகலாம் ?

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த கிட்டத்தட்ட 20 அமைச்சர்கள், உறுப்பினர்கள் எதிர்வரும் வாரத்தினுள் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு நபர் கொலை, போதைபொருள், எத்தனோல் வியாபாரம், உர மானியம் சுரண்டல், விவசாயிகளின் நஷ்டஈடு பணத்தை சுரண்டல், அரசாங்க நிதியை சுரண்டல் ஆகிய குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அவர்களுக்குள் உள்ளடக்கப்படுவார்கள்.
இதுவரையிலும் அதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் அதிகமானோர் தற்போதை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது.
ஜனக பண்டார தென்னகோன் 1999ஆம் ஆண்டுல் அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட கொலை குற்றச்சாட்டிற்கே அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இச் சம்பவத்தினால் மனமுடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினர் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதனை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளனர்.
எனினும் பெரிய அளவிலான குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையினால் தான் அதற்கு தலையிட முடியாதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அப்படியென்றால் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்கள் 2002 - 2004 ஆண்டுகளில் மேற்கொண்டவைகள் தொடர்பிலான குற்றச் 
சாட்டுகளுக்கு கைது செய்யப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்படுதல் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் திட்டமெனவும், பொலிஸாரை ஐக்கிய 
தேசிய கட்சி செயற்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை கடந்த 09 மாதங்களாக விளக்கமறியலில் தடுத்து வைத்திருப்பது 
சிக்கலான விடயமெனவும், கொலை குற்றச் சாட்டுக்கு 6 மாதங்களுக்கு அதிகமாக தடுத்து வைத்திருக்க முடியாதென இவ் உறுப்பினர் குழு சுட்டிக்காட்டியுள்ளனர்.
எப்படியிருப்பினும் ஜனக பண்டாரவை கைது செய்வதற்கு முன்னர் இது குறித்து ஜனாதிபதி அறிந்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக