18

siruppiddy

டிசம்பர் 31, 2013

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழு: இந்தியா அச்சம் .

.முஸ்லிம் தீவிரவாத குழுக்களினால் புரியப்படக்கூடிய தாக்குதல்களை தடுப்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய ராஜதந்திர அலுவலகங்களுக்கு வழக்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்குமாறு இந்தியா கோரியுள்ளது. இது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்திய அரசு டிசெம்பர் 26 ஆம் திகதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது. பங்களாதேச ஜமாத்-இ-இஸ்லாமி...

டிசம்பர் 28, 2013

கடத்தப்பட்ட நாயுடு மீண்டும் அமெரிக்கா செல்ல முடியாது!!

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செயய முயற்சித்த குற்றச்சாட்டுக்காக அமெரிக்காவில் சிறைத்தண்டனைக்கு உள்ளாகியிருந்த இந்திய வம்சாவளி சிங்கப்பூர் பிரஜை நாடு கடத்தப்பட்டார். இவர் விடுதலைப் புலிகளுக்கு 900,000 டொலர்களுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயற்சித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த நாடு கடத்தப்பட்ட 51வயதான பால்ராஜ் நாயுடு ராகவன் கடந்த 16 ஆம் திகதியன்று சிங்கப்பூருக்கு வந்தடைந்தார். இந்தநிலையில் நாயுடு மீண்டும் அமெரிக்காவுக்கு செல்வதற்கான...

டிசம்பர் 23, 2013

கொழும்புக்கு அழைக்கப்பட்ட பதுமனை காணவில்லை:

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில் கொழும்பு வந்திருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பதுமன், கொழும்பு வந்திருந்த நிலையில், ஒருவார காலமாக காணாமல் போயுள்ளதாக கொழும்பின் செய்தி முகவர் நிறுவனத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது; விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் படைப் பிரிவின் முன்னாள் தலைவரான கேர்ணல் பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதன் தலைமையில் புலிகளை மீண்டும் உருவாக்க பாதுகாப்புச்...

டிசம்பர் 21, 2013

என்னை அதிகாரியைப்போல் மிரட்டினார்- நளினி திடுக்கிடும் பேட்டி!

 சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் (நளினி) வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன். இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய் என்றார். கற்பனையைவிட நிஜம் சில நேரங்களில் அதிகமான சாகசங்களையும் அதிரடித் திருப்பங்களையும் புரியாத புதிர்களையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கும். ராஜீவ் காந்தி படுகொலை...

டிசம்பர் 18, 2013

தமிழக அரசியல்வாதிகள் பிரபாகரனுடன் இரகசியப் பேச்சு : ஆதாரங்களை அம்பலமாக்க இலங்கை திட்டம்

விடுதலைப் புலிகள் செய்த போர்க்குற்றங்கள், நிதி சேகரிப்பு, ஆயுதங்களை பெற்றுக்கொண்ட பல நாடுகள், பல நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் பற்றிய உண்மையான தகவல்களை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் வெளியிடுவது என அரசாங்கம் தீர்மானத்துள்ளது. புலிகளின் சகல செயற்பாடுகளும் அடங்கிய 8 காணொளிகளை அதிகாரிகள் தயாரித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த காணொளிகளின் பிரபாகரனுடன் இரகசியமான பேச்சுக்களை நடத்திய தமிழக அரசியல்வாதிகள்,...

டிசம்பர் 15, 2013

ஆனந்தி சசிதரன் நோர்வே பாராளுமண்ற உறுப்பினர். வெளிநாட்டுறவுகள்

அமைச்சு அதிகாரிகளுடன் சந்திப்பு. அண்மையில் மிகப் பெரும்பாண்மை வாக்குகளுடன் வடமாகாண சபை அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன் நோர்வே பாராளுமண்ற அங்கத்தவரும், வெளிநாட்டுறவுஇபாதுகாப்பு குழு அங்கத்துவருமான கிரிஸ்டியான், நூர்கயும், ஆளும் கட்சி அங்கத்தவர் ஹெல்கே ஊர்டென், வெளிநாட்டுறவுகள் அமைச்சின் அதிகாரி ஆகியோரைச் சந்தித்து யுத்த முடிவிலும் அதற்கு முன்னரும் காணாமற் போனோர், சரணடைந்த தன் கணவர் அடங்கலான விடுதலைப்போராளிகள், அரசியல் கைதிகள் நிலைமை,...

டிசம்பர் 12, 2013

ராஜபக்ச அரசு குறுகிய காலத்தில் 4.8 ட்ரில்லியன் ரூபாவை கடனாக ..

இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அரசுகள் இலவச கல்வி, சுகாதார சேவை உட்பட மக்களின் நலன்புரி பணிகளுக்காக 1.8 ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆனால் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான குறுகிய காலத்தில் 4.8 ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது எனவும் அவர் கூறினார். இதனடிப்படையில் நாட்டின் மொத்த கடன் 6.6 ட்ரில்லியன் ரூபாவாகும்....

டிசம்பர் 10, 2013

கறுப்பு நட்சத்திரம் விடை பெற்றுச் சென்றது: -

விடுதலை வானின் கறுப்பு நட்சத்திரம் விடை பெற்றுச் சென்றது: - ஆயினும் நம்பிக்கை ஓளியினை நமது கைகளியே தந்துவிட்டுச் சென்றது. ஆம்! உலகப்போக்குளைப் புரட்டிப் போட்டு, நாம் வாழும் காலத்திலேயே, ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் விடுதலையை நம் கண்முன்னேநனவாக்கிக் காட்டிய மாபெரும் தலைவர் நெல்சன் மன்டெலா அவர்கள் நம்மிடமிருந்து விடை பெற்றுச் சென்றுள்ளார். உலகெங்கும் விடுதலைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் திகழ்ந்தார். தென்னாபிரிக்காவில்...

டிசம்பர் 09, 2013

அபிலாசையை சாதகமாக பரிசிலீப்போம் - கனடிய மனிதவுரிமை

 கனடிய மனிதவுரிமை மையம் கனடிய அரசு நிறுவனங்களினுடன் இணைந்து ஏனைய நாடுகளில் இடம்பெறும் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பான விடயங்களிலும் பங்களிக்க வேண்டுமென கனடியப் பிரதமர் விடுத்த வேண்டுகோளை தாங்கள் 2014ம் ஆண்டிற்கான முக்கிய திட்டமாகப் பரிசீலிக்கவுள்ளதாக கனடிய மனிதவுரிமை மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களை கனடிய அரசிற்கும் கனடாவின் இதர கட்சிகளிற்கும் துறைசார் நிபுணத்துவத்துடன் எடுத்தியம்பி...

டிசம்பர் 08, 2013

சந்திரிக்கா அதிகாரத்திற்காக அரசியல்வாதிகள் மக்களை அழிக்க தயாராக!!

இலங்கையின் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது, அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சில அரசியல்வாதிகள் மற்ற இனத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்லவும், தாக்கவும் எரிக்கவும் தயாராக இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலுமிருந்து அரச தலைவர்கள், முன்னாள் அரச தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரமுகர்களும் தங்களின் புகழஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். அவரிடமிருந்து அரச தலைவர்கள்...

டிசம்பர் 07, 2013

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வதந்திகளைப் பரப்புவோருக்கு

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமு; வகையில் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தகவல்களை வெளியிடும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலோ அல்லது...

டிசம்பர் 05, 2013

முள்ளிவாய்க்காலில் ஐ.நா விசேட பிரதிநிதி சலோகா பெயானி!

கேப்பாபிலவுக்கும் அதிரடி விஜயம்.  இலங்கை வந்துள்ள உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவிசேட பிரதிநிதி சலோகா பெயானி, முள்ளிவாய்க்கால் மற்றும் கேப்பாபுலவுக்கு திடீரெனச் சென்று அதிர்ச்சி அளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்ற பெயானி மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனைச் சந்தித்தார். மாவட்டத்தின் யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றம், மேம்பாடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக அவருக்கு விளக்கம் அளித்தாக...

டிசம்பர் 03, 2013

வான்படை முகாம் தாக்குதல் சந்தேகநபர் சாட்சியம்.

   ரஷ்யர்களிடம் விசேட கொமாண்டோ பயிற்சி பெற்றேன்!தாம் உள்ளிட்ட சிலருக்கு பத்து ரஷ்யர்களால் விசேட கொமாண்டோ பயிற்சி, வழங்கப்பட்டதாக அநுராதபுரம் வான்படை முகாம் மீதான தாக்குதலின் பிரதான சந்தேக நபரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ராசவல்லவன் தவரூபன் என்ற குகன் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் வான்படை முகாம் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று அநுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் இடம்பெற்றது....

டிசம்பர் 01, 2013

தேசியத்தலைவரின் 59வது அகவை கனடாவில்

தேசியத்தலைவரின் 59வது அகவை ரொன்ரோ, கனடாவில் 26:11:2013 அன்று மாலை  வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மண்டபம் நிறைந்த மக்களின் முன் தேசியத் தலைவர் அவர்களை வாழ்த்திய பல நிகழ்வுகளுடன் வெகு சிப்பாகவம், அமைதியாகம் கொண்டாப்பட்டது. &nbs...

நவம்பர் 28, 2013

தீபம் ஏற்றி அகவணக்கத்துடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்!

துபாயில் தங்கியிருக்கின்ற ஈழத்தமிழர்கள், மாவீரர் நாளை கொண்டாட முடியாத வசதிகளற்ற ஓர் இடத்தில் இருக்கின்ற வசதிகளைப் பயன்படுத்தி தங்களால் முடிந்தளவிற்கு வெகு விமர்சையாக மாவீரர் தீபம் ஏற்றி அகவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தி மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து உள்ளனர்.   &nbs...

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு எழுச்சியுற நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்

லண்டனில் எக்ஸ்சல் மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வு மிக எழச்சியான முறையில் நண்பகல் ஆரம்பமானது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து மாவீரரானவர்களையும், வேறு இயக்கங்களில் இருந்து மாவீரரானவர்களையும் சேர்த்து இன்று அஞ்சலி செய்யப்படுவதாக விழாவின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார். &nbs...