சீன மீனவர்கள் 16 பேர் கடந்த வருடம் மே மாதம் 6ம் திகதி அன்று வடகொரியா மற்றும் சீன கடல் எல்லைக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபொழுது கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து படகின் சொந்தக்காரரான யூ சியுஜீன் கூறுகையில், எங்களை விடுவிக்க 98,000 டொலர் பணயத் தொகை கேட்டதாகவும், அவர்கள் அனைவரும் வடகொரிய அரசின் ராணுவத்தினராக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அண்டை நாடுகளுக்கு இடையே புதிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மீனவர்களின் கைது சீன மக்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
வடகொரியாவில் வணிகம் மற்றும் உதவித் தொடர்புகளில் சீனா முக்கியப் பங்கு வகித்தபோதிலும், அந்த நாடு கடந்த பெப்ரவரி மாதம் நடத்திய அணு ஆயுத சோதனைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பணத்திற்காக வடகொரியா உள்ளூர் காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 16 சீன நாட்டு மீனவர்களை அவர்களின் படகுடன், வடகொரியா விடுதலை செய்துள்ளதாக இன்று சீனா நாட்டின் அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக