18

siruppiddy

மார்ச் 21, 2015

அரசாங்க செயலணியும் பிரசன்னமாக வேண்டும்

  அரசாங்கத்தினால் வடமாகாண்தில் குடியேற்றக் காணிகள் விடுவிக்கப்படும் போது, அரசாங்கத்தின் காணி விடுவிப்பு செயலணியும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வசாவிளானில் பொது மக்களை குடியேற்றுவதற்கான காணிகள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், உண்மையில் அங்கு குடியேற்றக் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை.
இதனால் நேற்று தங்களின் காணிகளை பார்வையிட சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி இருந்தனர்.
இந்த நிலையில் காணிகளை விடுவிக்கும் போது காணி விடுவிப்பு செயலணியும் குறித்த பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, உண்மை நிலைமைகளை அவதானிக்க வேண்டும் என்று இந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பிரதமருக்கோ, ஜனாதிபதிக்கோ இங்கு விடுவிக்கப்படும் காணியின் தன்மை குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இந்த நிலையில் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள செயலணி, இந்த பகுதிக்கு விஜயம் செய்து விடுவிக்கப்பட்ட காணிகளை அவதானிக்கும் பட்சத்தில், அது குறித்த உண்மைத் தன்மைகளை புரிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறியு.ள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக