இலங்கை அதிபர் சிறிசேனாவின் தம்பி பிரியந்தா சிறிசேனா (வயது 40). தொழில் அதிபர். கொழும்பில் இருந்து 215 கி.மீ. வட கிழக்கே உள்ள பொலன்னருவா என்ற இடத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், அவருக்கும் அவரது நண்பரான லக்மல் என்பவருக்கும் 26–ந்தேதி இரவு ‘திடீர்’ தகராறு ஏற்பட்டது. இதில் பிரியந்தா தலையில் லக்மல், கோடரியால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவருக்கு முதலில் உள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கொழும்பு நகருக்கு விமானத்தில் கொண்டு
செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் மரணம் அடைந்தார். இந்த தகவலை கொழும்பு நகரில் போலீஸ் செய்தி தொடர்பாளர் ரூவன் ஞானசேகரா வெளியிட்டார்.
இலங்கை அதிபர் சிறிசேனா, சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
லக்மல் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்த மாதம் 8–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக