18

siruppiddy

டிசம்பர் 24, 2019

சுவிஸ் அரசாங்கத்தின் முக்கிய முடிவு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரத்தில்

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட விடயத்தை முடிவுக்கு கொண்டு வர சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் விரும்புகிறது.எனினும், இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தை தொடர்ந்தும் சட்டரீதியில் முன்னெடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் குறித்த பெண் பணியாளரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக  ஆங்கில இதழ் ஒன்று கூறுகிறது. குறித்த பெண் பணியாளர் தாம் கடத்தப்பட்டதாக கூறிய விடயம்...

டிசம்பர் 19, 2019

யாழ் ஆவரங்காலில் வாள்வெட்டு இளைஞர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

யாழ் ஆவரங்கால் பிரதேசத்தில் சற்று முன்னர் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் அச்சுவேலி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள்  எதிர்பார்க்கப்படுகின்றன. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

டிசம்பர் 16, 2019

சுவிஸ் தூதரக ஊழியர் பொய் சாட்சியம் வழங்கிய குற்ச்சாட்டில் பொலிஸாரால் கைது

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் (16.12.19) சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.கைது செய்யப்பட்ட குறித்த ஊழியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அறிய முடிகின்றது. கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியரை கைதுசெய்யுமாறு சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா  அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.பொய் சாட்சியம் வழங்கியமை...

நவம்பர் 30, 2019

காவலரணில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவுச் சந்தி பொலிஸ் காவலரணில் நேற்றிரவு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பொலிஸ் உத்தியோகத்தரின்  உயிரிழப்புத் தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழும்நிலையில்,  அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.யாழ்ப்பாணம் பொலிஸ்  நிலையத்தில் கடமையாற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய காமினி என்ற  உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தார்.யாழ்ப்பாணம் மண்டைதீவுச்...

மாணவி ஒருவருக்கு கோயில் மடப்பள்ளியில் வைத்து சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட, ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த அதிர்ச்சிச் சம்பவம் யாழ் வல்வெட்டித்துறையில் நடைபெற்றுள்ளது. தந்தையற்ற தரம் 4ல் கல்வி கற்கும் மாணவியே சீரழிக்கப்பட்டுள்ளார். மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு சென்றபோது, அவருக்கு எவ்வாறு கைத்தொலைபேசி கிடைத்தது என சந்தேகமடைந்த...

நவம்பர் 13, 2019

யாழ் நகரில் ஊடகவிலாளர்களுக்கு நீதி கோரும் நடை பயணம் முன்னெடுப்பு

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்.ஊடக அமையத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த விழிப்புணர்வு பயணம் இன்று இறுதி நாளாகவும் நடைபெற்றது.நவம்பவர் மாதம் 2 ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைப்போரை தண்டனையிலிருந்து  விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும், சர்வதேச தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு பயணம்  இன்று.13.11.2019. புதன்கிழமை யாழ் நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.   இதன் போது கொல்லப்பட்ட,...

ஜூன் 04, 2019

எப்போதும் ஆண் என்பவன் வாழ்க்கையில்…

என்ன தான் தோழி, காதலி, மனைவி, அம்மா என அனைவரையும் கிண்டல், கேலி செய்து விளையாடினாலும். அவர்களுக்கு பாதுகாவலனாக இருந்து எப்போதும் காப்பது ஆண் தான். இதை கொஞ்சம் காலரை தூக்கிவிட்டபடி காவலன் என்று சொல்லிக் கொள்ளலாம்.உடல் ரீதியாக  இருந்தாலும் சரி, மனம் ரீதியாக இருந்தாலும் சரி, ஓர் பெண்ணை முழுவதுமாக மகிழ்விப்பது ஆண் தான். இதை பெண்களால் கூட மறுக்க முடியாது. காதலனாக மட்டுமின்றி, தோழனாக  கூட ஒரு பெண்ணின் முழு புன்னகைக்கு பின் மறைந்திருப்பவன்...

மே 18, 2019

ஒரே நாளில் வரலாற்றில் முதன்முறையாக 762 பேருக்கு விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைகைதிகளை விடுதலைசெய்ய தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெலிகடை சிறைசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி  வெலிகடை சிறைச்சாலையில் 117 கைதிகள், பல்லேகல சிறைச்சாலையில் 62 கைதிகள், மாஹர சிறைச்சாலையில்  55 கைதிகள், அனுராதபுர சிறைச்சாலையில் 50கைதிகள்,பல்லன்...

மே 13, 2019

ஊரடங்குச் சட்டம் வடமேல் மாகாணம் முழுவதும் அமுலில்

மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வகையில் வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில்  குறித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம்  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டே இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

ஏப்ரல் 30, 2019

யாழில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு

யாழ்.சாவகச்சோிப் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவா்கள் மீது சரமாாியாக தாக்குதல் நடாத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 போ் காயமடைந்துள்ளனா். சாவகச்சேரி சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை (29.04.19) உட்புகுந்த நால்வர் கொண்ட குழுவொன்று வீட்டில் இருந்தவர்கள் மீது கொட்டன்களால் தாக்கி வாளினால் வெட்டி காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் . குறித்த தாக்குதல் சம்பவத்தில் அப்பகுதியை...

விடத்தல்தீவில் பாரிய தேடுதல்…!! வீடு வீடாகச் சோதனை

அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் முப்படையினர் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.விடத்தல் தீவு பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை டெட்டனேட்டர்களுடன் 4பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையிலேயே முப்படையினர் இணைந்து குறித்த  சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.வீடுகளுக்குச் சென்ற படையினர் வீடுகளை முழுமையாக  சோதனையிட்டதோடு, வீட்டில்...

ஏப்ரல் 08, 2019

பயங்கர மோதல் ஓமந்தையில் இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இரு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஓமந்தை, சின்னப்புதுக்குள வீதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையில் மோதல்  ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அனுமதிக்கப்பட்டவரில் ஒருவரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   இம்மோதலில் இரு மோட்டார் சைக்கிள்கள்...

மார்ச் 23, 2019

நள்ளிரவில் நடந்த தேடுதலில் வடக்கின் முக்கிய பிரதேசத்தில் பெரும் புதையல்

வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவிலுள்ள காஞ்சிரமோட்டை கிராமத்தில் புதையலுடன் சந்தேகநபர்கள் நால்வர்  கைதாகியுள்ளனர். முச்சக்கரவண்டியில் சென்ற சந்தேகநபர்களே நேற்று இரவு புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சந்தேகநபர்கள் நால்வரும்  காஞ்சிராமோட்டை காட்டு பகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல்  தோண்டியுள்ளனர்.அவற்றை சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் கடத்தி செல்ல முற்பட்டுள்ளனர்....

மார்ச் 21, 2019

இலங்கை உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 130 ஆவது இடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பிரான்ஸ் 24 வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு நேற்யை தினம் இந்த பட்டியல்  வௌியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பின்லாந்து இரண்டாவது தடவையாகவும் முதல் இடத்தினைப்பிடித்துள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை நோர்டிக் நாடுகள் பெற்றுள்ளன. நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத்...

பிப்ரவரி 27, 2019

நாட்டில் மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடத்தில் நடைபெறும் சாத்தியம்

இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடாத்தப்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தேர்தல்கள் செயலக வட்டாரத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.நாட்டிலுள்ள பல மாகனாணங்களின் சபையின் ஆட்சிக் காலம் முடிவடைந்து தேர்தல்கள் நடாத்தப்பட இருக்கின்றன. அதே நேரம் இன்னும் சில மாகாண சபைகளின் ஆட்சிக் காலமும் முடிவடைய இருக்கின்றன. இந் நிலையில் மாகாணங்களுக்கான தேர்தலை நடாத்துமாறு பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை...

பிப்ரவரி 26, 2019

படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ட

வடக்கில் படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டமும், கவனவீர்ப்பு வாகன ஊர்வலமும் கேப்பாபுலவில் இன்று ஆரம்பிக்கப்பட்டன. 727 ஆவது நாளாக தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்ககோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுடன் காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் இணைந்து இவற்றை  முன்னெடுத்தன. கேப்பாபுலவு வீதியால் சென்ற வாகன ஊர்வலம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து அங்கு ஜனாதிபதிக்கான மனு மாவட்ட உதவி செயலாளர் ஆ.லதுமீராவிடம்  கையளிக்கப்பட்டது. கையெழுத்து...

பிப்ரவரி 24, 2019

யாழில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் தமிழ் இதழியல் மாநாடு

யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு இடம்பெறவுள்ளது.இதன்படி, நான்காவது பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு எதிர்வரும் ஏப்ரல் 5, 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக இடம்பெற உள்ளது.பன்னாட்டு தமிழ் இதழியல் இயக்கமும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல்துறையும் உதயன் பத்திரிகையோடு இணைந்து இந்த மாநாட்டை  ஒழுங்கு செய்துள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல்துறைத் தலைவர் பேராசிரியர்...

பிப்ரவரி 18, 2019

அநு­ரா­த­பு­ரடத்தில் விடு­தலைப் புலி­க­ளின் சின்­னம் பொறிக்­கப்­பட்ட தொப்பி, துப்­பாக்கி

அநு­ரா­த­பு­ரம் தக­யா­கம பகு­தி­யில் விடு­தலைப் புலி­க­ளின் சின்­னம் பொறிக்­கப்­பட்ட தொப்பி, துப்­பாக்கி ரவை­கள் போன்­றன மீட்­கப்­பட்­டுள்­ள­தாகப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அநு­ரா­த­பு­ரம் தக­யா­கம, ஜெய­சிங்க பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் மாலை 4மணி­ய­ள­வில் மாந­க­ர­ச­பை­யி­ன­ரால் வீதி­யோ­ரங்­களை  துப்­ப­ரவு செய்­த­போது, வீதி­யோ­ரத்­தி­லுள்ள வடி­கா­னில் பை ஒன்­றில் வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் 46 துப்­பாக்கி ரவை­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. துப்­ப­ரவு...

பிப்ரவரி 15, 2019

யாழில் நுண்கடனால் அவதியுறும் .பெண்களுக்கு தீர்வு:

நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நுண்கடன் திட்டத்தினால் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியும். ஆனால் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்ட நுண்கடன் திட்டத்தினால் வறுமையான குடும்பத்திலுள்ள பெண்களே அதிகளவு  பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், வட்டி வீதங்கள்...

பிப்ரவரி 13, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு நோக்கி திருப்பிய பார்வை

வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் . வட மாகாணத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள நீர் வழங்கல் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது . இதன் போதே ஜனாதிபதி  இவற்றை கூறினார் , “ விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட வடக்கு...

பிப்ரவரி 11, 2019

பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக வடக்கில் நடத்த ஏற்பாடுகள்

வடக்கு மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி இந்தமாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம்  தெரிவித்துள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சிங்கள மொழியில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள சிறி போதிதக்‌ஷணாராமய விகாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன வடக்கு...

மானிப்பாயில் கூடடத்தில் விஜயகலா மகேஸ்வரன் சொன்னதின் நோக்கம்

மீண்டும் புலிகள் உருவாக வேண்டும் என்றோ அல்லது தனிநாடு ஒன்றையோ அல்லது ஆயுதப் போராட்டத்தையோ, ஆதரித்துப் பேச வேண்டிய உள்நோக்கம் எனக்கு இருக்கவில்லை என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மானிப்பாயில் நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டிருந்தன. எனினும் யுத்தத்திற்குப் பின்னர் இப்பிரதேசம் கல்வியில் பின்தங்கியுள்ளது. இந்நிலைமையை...

பிப்ரவரி 09, 2019

இந்தியாவும் துணை நின்றது! விடுதலைப் புலிகளை அழிக்க மஹிந்த பரிந்துரை

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது என மஹிந்த ராஜபக்ச இந்தியாவில் அதிரடியாக தெரிவித்துள்ளார். 2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்திய இலங்கை உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனவும்  அவர் தெரிவித்துள்ளார். பெங்களுரில் இந்து நாளிதழின் கருத்தரங்கில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. “இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இரு தரப்பு...