18

siruppiddy

ஏப்ரல் 09, 2015

ஜூன் இறுதியில் போர்க் குற்ற விசாரணை பற்றிகூறுகிறேன் என்கிறார் ஜனாதிபதி

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டு சம்பந்தமான விசாரணைகள் குறித்து ஜூன் மாத இறுதியில் விபரங்களை அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி அண்மையில் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, போர் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடத்தப்பட உள்ள உள்நாட்டு விசாரணைகளுக்கான முனைப்புகளை ஒரு மாதத்திற்குள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.
உள்நாட்டு விசாரணைக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திடம் பேசியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க போவதாக மைத்திரிபால சிறிசேன தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், நிறைவேற்று அதிகாரம் ஒரு இடத்தில் குவிந்திருப்பது நாட்டுக்கு பாரிய பிரச்சினை எனவும் அந்த அதிகாரங்கள் பகிர்ந்து செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் சீனாவுடன் கொண்டிருந்த அதிக நெருக்கம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, எவரையும் பகைத்து கொள்ள போவதில்லை எனவும் சகல உலக நாடுகளுடன் நட்புறவை பேண போவதாகவும் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக