மலரும் புத்தாண்டில் எம்மை சுதந்திரம் அற்ற மனிதக்கூட்டமாக செயற்படவைத்து எம்மைச்சுற்றி இராணுவச்சூழலைத் தொடர்ந்து வைத்திருப்பதை இனியாவது நீக்கவேண்டும் அழைப்பு விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
யாழ்.இந்தியத் தூதரகமும், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடத்திய புத்தாண்டு இசை நிகழ்வு நேற்று நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிய வசந்தம் ஒன்று மலர வேண்டுமானால் தேவையற்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு எம்மீது திணிக்கப்பட்டிருக்கும் அடிமைத்தனங்கள் நீக்கப்படவேண்டும்.'' என்று அவர் குறிப்பிட்டார். "இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிகழ்வை பார்க்கும் போது எமது பாரம்பரியத்தை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது.
நடனங்கள் வேறுமனே கை, கால்களை ஆட்டும் ஒரு நிகழ்வாக அல்லாது அவற்றை பற்றிய உள்ளாற்றலையும் ,உயர்ந்த கருத்துக்களையும் எடுத்தியம்பி எம்மை அவை சம்பந்தமாக அறிவுடையவர்களாக ஆக்குவது இந்த நடன முறைகள் பல காலத்திற்கு அழியாது இருக்க உதவி புரியும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
யாழிலிலுள்ள இந்திய துணைதூதரக அதிகாரிகள் முன்னிலையினிலேயே முதலமைச்சர் இராணுவ பிரசன்ன விவகாரத்தை போட்டுடைத்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக