முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏப்ரல் 24-ம் திகதி வெள்ளிக்கிழமையும் அவருடைய சகோதரரான முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ 22-ம் திகதி புதன்கிழமையும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக் குழுவுக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க செய்திகள் கூறுகின்றன.
இதே நேரம் மஹிந்தவின் மற்றுமொரு சகோதரனான பசில் ராஜபக்ஷ 21-ம் திகதி அமெரிக்காவில் இருந்து இலங்கை வரவுள்ளார். நீதிமன்ற அழைப்பாணைக்கு ஏற்ப இலங்கைக்கு வந்தவுடன் இரகசிய பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுக்கவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தொலைதொடர்பு கட்டுப்பாட்டு கொமிஷன் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் இலஞ்ச ஆணைக் குழுவில் வாக்குமூலம் கொடுக்கவுள்ளார்.
அடுத்த வாரம் கடந்த அரசாங்கத்தின் பிரபலங்கள் ஏழு பேர் வரை விசாரிக்கப்படலாம் அல்லது கைதுசெய்யப்படலாம் என்று அரசாங்க செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக