சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பான விமர்சன செய்திகளை ஊடகங்களில் கசியவிடாது தடுக்க விசேட திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பான செய்திகளை கசியவிடாது தடுக்க பிரதான ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சிலருக்கு திட்டத்தின் உரிமை நிறுவனம் லஞ்சம் வழங்கியுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த ஊடகவியலாளர்களுடன் சீன தூதரகத்தில் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் பலவற்றின் பிரதிநிதிகளுக்கு 10 நாள் சீன விஜயத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டமை திட்டத்தின் ஒரு பகுதி என சூழலியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த பயணத்தை ஊடகத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் தெரிவு இரகசியமாக இடம்பெற்றுள்ளது.
இந்த செய்திபடியே பிரதான ஊடகங்கள் சில சீன துறைமுக நகரத் திட்டம் குறித்த செய்திகள் மீது கூடிய கவனம் செலுத்தாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக