18

siruppiddy

ஏப்ரல் 07, 2015

ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று தற்போது நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போது கூட்டணி கட்சிகளுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இன்றையதினம் தீர்வு காணப்படுமா? இல்லை தொடர்ந்து பேசப்படுமா? என்பது குறித்து உறுதியாக தெரிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக