வடக்கில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்று உறுயளிக்கப்பட்டால் மாத்திரமே 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்க முடியம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வைத்து கூறியுள்ளார்.
கடந்த தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து 9 பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர்.
ஆனால் இந்த முறை அந்த எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் சீர்த்திருத்தத்தின் மூலம் வடமாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும் நிலைமை இருக்கிறது.
வடக்கில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்துள்ளமையால் அங்கிருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பது நியாயமற்றது.
தமிழ் நாட்டில் இன்னும் 100,000 பேர் அகதிகளாக உள்ளனர்.
இந்த நிலையில் வடக்கின் நாடாளுமன்ற ஆசனங்களில் கைவக்கப்படாது என்று உறுதியளித்தால் மாத்திரமே 20ம் திருத்தச் சட்டமாக தேர்தல் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக