மகிந்த ராஜபக்ஷவிடம் மோட்டார் சைக்கிள் வாங்கியவர்கள் வேலையை விட்டு விலகினாலே வேறு வேலைக்கு சென்றாலோ மோட்டார் சைக்கிளுக்கு உரிய சந்தை பெறுமதியை புதிய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என திறைசேரி உத்தரவு இட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷ காலத்தில் அரச வெளிக்கள ஆண் , பெண் உத்தியோகஸ்தர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
அவ்வாறு மோட்டார் சைக்கிள்களை பெற்ற உத்தியோகஸ்தர்கள். வெளிக்கள உத்தியோகஸ்தர் பதவியில் இருந்து விலகினாலோ அல்லது வேறு வேலைக்கு மாற்றல் ஆகி சென்றாலோ மோட்டார் சைக்கிளுக்கு உரிய சந்தை பெறுமதியினை செலுத்த வேண்டும் என திறைசேரியின் திட்டமிடல் பிரிவால் மாவட்ட செயலகங்களுக்கு சுற்று நிரூபம் அனுப்பி வைக்கபப்ட்டுள்ளது.
ஆண்களுக்கான மோட்டார் சைக்கிள் 1 லட்சத்து 94ஆயிரத்து 920 ரூபாய் எனவும் பெண்களுக்கான
மோட்டார் சைக்கிள் 1 லட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாய் எனவும் பதவி விலகி செல்பவர்கள் அல்லது வேலை மாற்றல் ஆகி செல்பவர்கள் முன்னர் செலுத்திய 50 ஆயிரம் ரூபாயினை தவிர்த்து மிகுதி பணத்தினை செலுத்த வேண்டும் என அந்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தற்போது யாழ்,மாவட்டத்தில்
சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் வேலை மாற்றல் ஆகியும் தமது வெளிக்கள உத்தியோகஸ்தர் பதவியில் இருந்தும் மாற்றல் ஆகி உள்ளனர். அவர்கள் மோட்டார் சைக்கிளுக்கு உரிய முழு தொகையினையும் ஒரே தடவையில் செலுத்த முடியாது எனவும் தவணை முறையில் அதற்குரிய மிகுதி பணத்தினை செலுத்துவதாகவும் கோரி
இருக்கின்றனர். தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும், மோட்டார் சைக்கிளுக்கு உரிய தொகையினை ஒரே தடவையில் செலுத்த கோரி இருப்பதனால் தாம் மிகுந்த பண நெருக்கடிக்குள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக