18

siruppiddy

ஆகஸ்ட் 31, 2015

இதுதான் நீங்களும் உங்கள் காதலும்.

இன்று காதலுக்காக உயிரை மாய்ப்பவர்களும், ஏங்கித்தவிப்பவர்களும், ஒருத்தனுக்கு பல பெண்களும், ஒருத்திக்கு பல ஆண்களும் போட்டு போடும் நிலையாக காதல் போய்க்கிடக்கு…சினிமாவை நிஜவாழ்க்கையில் காண துடித்து தம் வாழ்க்கையின் பெரும் பகுதியை இழக்கிறார்கள்.. சிலருக்கு பொழுதுபோக்கு…ஆடை மாற்றுவது போல்  மாற்றுகிறார்கள் .. எல்லாம் கல்யாணத்தின் பின் காணாமல் போயிடும்.. கண்ணே என்றவன் அடியே எனவும், அன்பே என கொஞ்சியவனை ஏண்டா உன்னை கட்டினேன் என அலுத்து காலம்...

ஆகஸ்ட் 27, 2015

இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இரகசியங்கள் அம்பலம் !!!

கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தடுத்து வைக்கப்பட்ட கிரித்தலை முகாமில், இரகசிய சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கொன்றினூடாகவும், எக்னெலிகொட  தொடர்பில் கைதாகியுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 7 பேரிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட விசாரணைகள் ஊடாகவும் இந்த சித்திரவதை கூடம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்...

ஆகஸ்ட் 24, 2015

ஊழல் மோசடி கோட்டாபய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் இவ்விசாரணையானது, தற்போது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த விசாரணைகளின் நிமித்தம், கோட்டா காலை 10 மணியளவில் அங்கு சென்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ரக்ன லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும்...

ஆகஸ்ட் 23, 2015

பல உயர் அரசியல்வாதிகள் கைது செய்யப்படக் கூடிய சாத்தியம்???

லங்கையில்  அடுத்து வரும் நாட்களில் உயர் அரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்படவுள்ளனர். நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்படவுள்ளனர். ஏற்கனவே பொதுத்தேர்தல் நடைபெற்றமை காரணமாக தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. நிதிக்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்காக ஏற்கனவே மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன. இந்தநிலையில்...

ஆகஸ்ட் 22, 2015

கடற்படைவசமிருந்த 40 ஏக்கர் காணிகள் ஒப்படைப்பு!

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 40 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஒப்புதல் கடற்படையினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கப்பட்டுள்ளது. சம்பூரில்  உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கியதன் பின்னர்,...

ஆகஸ்ட் 20, 2015

நாளை ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம்

ரணில் விக்கிரமசிங்க நாளை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்வு நாளை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

ஆகஸ்ட் 17, 2015

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இலங்கையில் பரபரப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறும் புத்தகம் ஒன்று, இலங்கையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபாகரன் இலங்கையில் தனி ஈழம் கேட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடி வந்தனர். கடந்த 2009–ம் ஆண்டு, சிங்கள ராணுவத்துடனான விடுதலைப்புலிகளின் போர் உச்சக்கட்டம் அடைந்தது. அப்போது (2009–ம் ஆண்டு, மே மாதம் 18–ந் தேதி) விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்று விட்டதாக...

ஆகஸ்ட் 16, 2015

பொலிசாருக்கு அதிகாரம் வாக்களிப்பை சீர்குலைக்க முயன்றால் துப்பாக்கிச் சூடு!

அமைதியான- நீதியான தேர்தலை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களை துப்பாக்கியால் சுடும் அளவிற்கு, பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.  அமைதியாக தேர்தல் நடத்தப்படுவதனை தடுக்க முயற்சிக்கும் எந்தவொருவரையும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்விதமான அச்சமும் சந்தேகமும் இன்றி தைரியமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கத் தேவையான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது....

ஆகஸ்ட் 14, 2015

சிறைகளில் இன்னும் சித்திரவதைகள் தொடர்கின்றனவா?

இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக வெளியாகியுள்ள அறிக்கை குறித்து தமக்கு தெரியாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இந்த தகவலை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வெளியிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் பின்னரும் இலங்கை சிறைகளில் படையினரின் சித்திரவதைகள் தொடர்வதாக லண்டனை தளமாகக்கொண்ட FED என்ற அமைப்பை கோடிட்டு தெ காடியன் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. பிரித்தானியாவில்...

புலிகளை பணத்தைக் கொடுத்தேனும் அழித்தோம்???

பிரபாகரனுக்கு பணம் கொடுத்தேனும் இந்த நாட்டில் முழுமையாக புலிகளை அழித்து விட்டோம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியினர் புலிகளுக்கு பணத்தையும் கொடுத்துவிட்டு நாட்டையும் கொடுக்கவே முயற்சித்தனர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம்ஜெயந்த தெரிவித்தார். தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கம் அமையுமானால் சம்பந்தனின் கோரிக்கை நிறைவேற்றப்படும். தனிநாடு உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய...

ஆகஸ்ட் 09, 2015

புலிகளின் தலைவர் பதில் தமிழீழம் கைகூடிவிட்டால்!

ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையும் என பிரபாகரனிடம் இந்திய ஊடகம் ஒன்று 1986 இல் கேள்வி கேட்டபோது அதற்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் பதிலளிக்கையில் தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப்பெறும். சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகின்றேன். இதில் மனித சுததிரத்திற்கும் தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும். தமிழ்...

ஆகஸ்ட் 05, 2015

மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்குஆதராவாக பாதயாத்திரை!

மிருசுவிலில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு நியாயம் வேண்டி கடற்படை வீரர் ஒருவர் பாதயாத்திரையொன்றை ஆரம்பித்துள்ளார். மிருசுவிலில் வீடகளைப் பார்க்கச் சென்ற பொதுமக்கள்  எட்டுப்பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தி குறித்த இராணுவ அதிகாரிக்கு அண்மையில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த இராணுவ அதிகாரிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி,  ஊனமுற்ற கடற்படை வீரர் ஒருவர் பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளார்....

ஆகஸ்ட் 02, 2015

தேர்தல் குறித்த புலனாய்வுப்பிரிவின் கருத்துக் கணிப்பு!

தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பான கருத்துக் கணிப்பு அறிக்கை ஒன்றை அரச புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். அவ்வறிக்கையின் பிரகாரம் மகிந்த ராஜபக்ச அணியினரை விடவும் ரணில் விக்ரமசிங்க அணியினர் பலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு, மற்றும் மாத்தளை, கேககாலை ஆகிய மாவட்டங்களின் முடிவுகள் நிச்சயமற்றிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி 90 ஆசனங்களைக் கைப்பற்றும் எனவும், 12 முதல் 14 தேசியப்...

எமக்கான நீதி இன்றே கிடைத்தாக வேண்டும்! ஈழத்தமிழர் மக்களவை!

தமிழர் தாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புப் போரின்போது தமிழ்மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரனையை உலக்த்தமிழர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கையில் சிறிலங்கா அரசுடன் இணைந்து உள்ளக விசாரனை பொறிமுறை ஒன்றினை உருவாக்க ஐ.நா. சபை திட்டமிட்டுள்ளமை அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்பதை ஐ.நாவில் இருந்து கிடைத்துள்ள...