18

siruppiddy

டிசம்பர் 27, 2018

விடுதலைப் புலிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது தமிழீழ விடுதலை புலிகளுடன் தமிழ் அரசியல் தலைமைகள் செய்து கொண்ட உடன்படிக்கை ஊடானது’ என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை  குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படுவதுக்கு முன்னரான நிகழ்வுகளை தொடர்ச்சியாக பார்த்தால் ஜனநாயக ரீதியான தேர்தலில்...

டிசம்பர் 22, 2018

தடம் பதிக்கும் தமிழர் தலைநகரில் அமெரிக்க இராணுவம்

இலங்கையில் அமெரிக்காவின் இராணுவ முகாமினை நிர்மாணிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.திருகோணமலையில்  நிர்மாணிக்கப்படவுள்ள இந்த முகாமினை, அமெரிக்க இராணுவ முகாமில் கடற்படை தளவாட மத்திய நிலையமாக பயன்படுத்த அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க கடற்படையின் தகவல் தொடர்பு அதிகாரி கிராண்ட் கிரேஸ் என்பவரை அடிப்படையாக கொண்டு இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இராணுவ முகாமினை  அமைக்கும்...

டிசம்பர் 03, 2018

களுவாஞ்சிக்குடியில் யுவதியை கடத்திய இளைஞர் குழு

விரதம் அனுஷ்டிப்பதற்காக ஆலயத்திற்கு வருகை தந்திருந்த யுவதி, இளைஞர் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டபோது துரிதமாகச் செயற்பட்ட பொதுமக்கள் யுவதியை கடத்தல் குழுவிடமிருந்து மீட்டதோடு சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களான இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, தன்னைக் காப்பாற்றுமாறு அவலக் குரலெழுப்பிய நிலையில் இளம்பெண்ணொருவர் முச்சக்கரவண்டியில்...

மைத்திரி நாட்டிலுள்ள பரபரப்பின் மத்தியில் பசிலைச் சந்தித்தார்

சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்‌ஷவும் நேற்றிரவு சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. நாட்டில் தொடரும் அரசியல் இழுபறி நிலைகளுக்கு மத்தியிலேயே இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது பசில் ராஜபக்‌ஷ, நல்லாட்சி அரசாங்க காலத்துக்கு  முந்திய அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர் என்பதுடன் நல்லாட்சி அரசாங்க...

பொலிஸ் அதிகாரி அதிரடஎன் தந்தை தமிழன் என்பதில் எனக்குப் பெருமை

குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் என தெரி­வித்­துள்ளார். மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன  பெர­முன கட்­சியின் உறுப்­பினரான ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிர­சன்ன இவ­ரது பூர்­வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே நிஷாந்த டி சில்வா இவ்வாறு குறிப்­பிட்­டுள்ளார். நிஷாந்த டி சில்வா தொடர்ந்தும்...

நவம்பர் 28, 2018

முப்படைகளின் பிர­தானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சற்று முன்னர் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.11 மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் பிர­தான  சந்­தேகநபர் நேவி சம்­பத்­துக்கு அடைக்­கலம் கொடுத்தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள ரவீந்திர விஜேகுணரத்னவை நேற்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசா­ரணைப் பிரிவில் அவரை ஆஜ­ரா­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டிருந்தது. எனினும்,...

நவம்பர் 27, 2018

கிளிநொச்சி பத்து வருடங்களின் பின்பு இன்று ஏற்பட்ட பாரிய மாற்றம்

 இறுதி யுத்தத்தின் பின்னராக பத்து வருடங்களின் (2009)  பின் கிளிநொச்சி டிப்போ சந்தியில் மாவீரர் வளைவு நாட்டி நிமிர்த்தப்பட்டுள்ளது.ஏ-9 வீதியில் நாட்டப்பட்டுள்ள குறித்த வளைவினை  தென்னிலங்கை பயணிகளும் பிரமிப்புடன் பார்த்துச்செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.இதனிடையே யாழ்.முன்னணி பாடசாலைகள் சிலவற்றின் முன்னதாகவும்  இன்று மாவீரர் தின அலங்காரங்கள்,பதாதைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது .இதனிடையே பெரும்பாலான...

நவம்பர் 15, 2018

அதிரடிப் படையினரால் யாழில் வெடிமருந்துகள் மீட்பு

யாழ். குருநகர், இறங்குதுறையில் இருந்து ரி.என்.ரி மற்றும் சி4 வகை வெடிமருந்துகள் விசேட அதிரடிப் படையினரால்  மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிப் படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு குருநகர் இறங்குதுறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த வலைக்குள் இருந்து ரி.என்.ரி. மற்றும் சி4 வகை 2 கிலோ 196 கிராம் நிறையுடைய வெடிமருந்துகள்  கைப்பற்றப்பட்டுள்ளன. வெடிமருந்துகள் தொடர்பாக விசேட அதிரடிப் படையினர் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றதுடன்,...

அக்டோபர் 31, 2018

காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் சிப்பாயின் சடலம்

யாழ். காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை முகாமின் ஆயுத களஞ்சிய நுழைவாசலுக்கு அருகில் இருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த 19 வயதுடைய அபயரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில்...

அக்டோபர் 27, 2018

நாளைபுதிய அமைச்சரவை பதவியேற்கலாம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர்களாக  நியமிக்கப்படுவோரின்  பட்டியலை குறித்து ஜனாதிபதியும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் கலந்துரையாடி தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. நாளைய தினம் பதவியேற்கும் அமைச்சரவை 30 அமைச்சர்களை கொண்டிருக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

அக்டோபர் 08, 2018

தலைவரின் தாயாரினை இறுதி வரை பராமரித்த வைத்திய அதிகாரி இயற்கை எய்தியுள்ளார்

விடுதலைப் புலிகளின் தலைவரின் தாயாரை இறுதி வரை பராமரித்து வந்த வைத்திய அதிகாரி மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் இயற்கை எய்தியுள்ளார்.வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் (ஓய்வுபெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி) இன்று காலை இயற்கையெய்தியிருந்தார். சிறந்த வைத்திய நிபுணரான, அவர் இலங்கை இந்திய இராணுவ காலப்பகுதியில் வடமராட்சி பிரதேச மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய சேவையாளராவார்.விடுதலைப்புலிகளின்...

செப்டம்பர் 05, 2018

மக்களின் பேருந்தும் மீது மஹிந்தவுக்காக படையெடுத்து வந்து தாக்குதல்!!

மக்களை ஏற்றி வந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பதுளை பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இலக்கத்  தகடுகள் அற்ற கனரக வாகனம் ஒன்றில் வந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த பேருந்தில் நாடாளுமன்ற  உறுப்பினர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதேவேளை, கொழும்பு – கடவத்தை பிரதேசத்தில்  பொதுஜன பெரமுன கட்சியின்...

செப்டம்பர் 04, 2018

மண்கும்பாண் பகுதியில் நான்கு மோட்டார் குண்டுகள் மண்ணுக்குள் மீட்பு

யாழ்ப்பாணம் மண்கும்பாண் பகுதியில் அரச காணி ஒன்றில் நான்கு மோட்டார் குண்டுகள் மண்ணுக்குள் புதைந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. மக்களால் ஊர்காவற்துறை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து அடுத்து சிறப்பு அதிரடிப்படை உதவியுடன் குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கை இடம்பெற்று  வருகின்றது நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

ஆகஸ்ட் 11, 2018

மட்டக்களப்பு மாநகரசபைக்கு யாழ் மாநகர முதல்வர் விஜயம்

யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மட்டக்களப்பு மாநகரசபைக்கு  (10.08.2018) விஜயம் மேற்கொண்டதுடன் மாநகரசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடலும் மேற்கொண்டிருந்தார். இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் எனப் பலரும் கலந்து  கொண்டிருந்தனர். இதன் போது மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள், அமைவுகள், மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பில்...

ஆகஸ்ட் 09, 2018

நாட்டில் முடங்கிப் போன ரயில் சேவைகள் களத்தில் இறங்கிய ராணுவம்

ரயில்வே ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பை முன்னிட்டு ரயில் பயணிகளுக்கு அமைச்சர் மங்கள சமரவீர மகிழ்ச்சியான செய்தியை  அந்த வகையில் ரயில்வே ஊழியர்களின் பணிப்  பகிஷ்கரிப்பு நிறைவடையும் வரையில் ரயில் பயணிகள், தங்களது பயணச்சீட்டை அல்லது பருவச் சீட்டை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில்  இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார். ரயில்வே ஊழியர்கள் நேற்று பிற்பகல் திடீரென வேலை நிறுத்தத்தை...

ஜூலை 13, 2018

ஆளுநர் அலுவலகம் முன்பாக அமர்ந்து போராடும் ஆசிரியை!!

யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாகப் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆளுநரைச் சந்திப்பதற்கு அனுமதி கோரிய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் வாசலில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.ஆசிரியராகக் கடமையாற்றிய குறித்த பெண், தனக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவையை பெற்றுத் தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

ஜூலை 11, 2018

மீன்பிடி படகுகள் அனைத்தையும் பதிவு செய்யும் நடவடிக்கை

வடக்கு கடற்பரப்பில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் வகையில் மீன்பிடி படகுகள் அனைத்தையும் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடல்களினூடாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் இதுவரை பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள் இணைந்ததாக கடற்றொழில் நீரியல்வளத்துறையின்...

பேருந்தில் சென்ற மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவ வீரர் கைது

வவுனியாவிலிருந்து பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச்சீருடையுடன் சென்ற பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவச்சிப்பாயை  பொலிஸ் நிலையத்தில் மறைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து பொதுமக்களும் பேருந்தில் சென்ற பயணிகளும் பொலிஸ் நிலையத்தைச்சுற்றிவளைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் 4மணியளவில் பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச்சீருடையுடன் மாணவி ஒருவர்...

ஜூன் 20, 2018

அறிவியல்நகரில் புதையலை தேடியவர் பொலிஸாரால் கைது

. கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் நவீன உபகரணமொன்றின் உதவியுடன் விடுதலை புலிகளின் புதையல் தேடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நவீன ரக ஸ்கேனர் உபகரணத்தை பயன்படுத்தி குறித்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஸ்கேனரின் மதிப்பு 58 லட்சம் ரூபாய்...

ஜூன் 16, 2018

ராஜீவ் காந்தி கொலையின் தலைவர்.இத்தாலியில் உயிருடன்

ராஜீவ் காந்தி கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருப்பதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சொல்வது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையா? அல்லது புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டம்மானையா? என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதனை வரவேற்று சுப்பிரமணியன் சுவாமி...

மே 21, 2018

வவுனியாவில் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எரிபொருட்களின் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மக்களை பசியில் தள்ளும் அரசுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும்,  மக்கள் அதிகாரங்களை நிலை நிறுத்த அனைத்து மக்களையும் இன, மத, பேதமின்றி...

மே 18, 2018

முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ் பல்கலை மாணவர் உந்துருளிப் பேரணி

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை எழுச்சி மிக்கதாக்கும் வகையில்  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நோக்கிய உந்துருளிப் பேரணி சற்று முன்னர் யாழ்ப்பாணத்தி லிருந்து புறப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இருந்து ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் உந்துருகளோடு...

மே 17, 2018

உறவுகளுக்கு உணர்வூட்டி துளிர் பெறும் மே 18: கண்ணீரை காணிக்கையாக்கிய நாள்

மே 18 ஆம் திகதி உயிரிழந்த ஆத்மாக்களுக்கு உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு நாளை அனுஷ்டிக்கப்பட இருக்கும் நிலையில், கண்ணீரை காணிக்கையாக்கி உயிரிழந்த உறவுகளின் ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் துயரமான  நாள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் உன்னத உறவுகள் சார்பாக தெரிவித்திருக்கும் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் போராட்ட குணமும் கூடவே உணர்வுகளையும் வெளிப்படுத்துபவர்களாக,  ஒருமித்த...