18

siruppiddy

அக்டோபர் 27, 2013

ஆறு புதிய மீன் பிடித்துறைமுகங்கள் வடமாகாணத்தில்

வடமாகாணத்தில் ஆறு புதிய மீன் பிடித்துறைமுகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு, மீசாலை, படுவக்கட்டை, இலங்கைத்துறை மற்றும் பளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இம்மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படுமெனவும், நிர்மாணப்பணிகளை தாய்வான் நாட்டு நிறுவனமொன்று...

அக்டோபர் 26, 2013

புலிகள் ஒன்றுகூடுகிறார்கள் :கனடாவில்

கனடா பிரதமர் கொழும்பில் நடக்கும் உச்சி மாநாட்டிற்குச் செல்லமாட்டார் என்று அறிவித்ததை தொடர்ந்து இலங்கை அன் நாடு மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளது. சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கும் சிங்களவரான றோகான் குணரட்ண என்பவர், புலிகள் தற்போது கனடாவில் ஒன்றுசேர ஆரம்பித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா சென்றடைந்த படகில் சில தமிழ் இளைஞர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்று அவர் மேலும்...

அக்டோபர் 21, 2013

கட்டுநாயக்க அதிவேக பாதையில் பயணிப்பதற்கான கட்டண ?

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதையினூடாக பயணிப்பதற்கான கட்டணங்கள் குறித்த சுற்று நிருபம் பெருந்தெருக்கள் அமைச்சினால் வெளியிட்டுள்ளது. இவ் அதிவேகப் பாதையினூடாகச் செல்லும் வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கார், ஜீப் மற்றும் சிறியரக வேன் ஆகியவற்றுக்கு 300 ரூபாவும் லொறி, பஸ் ஆகியவற்றுக்கு 600 ரூபாவும் அறவிடப்படவுள்ளது. இக் கட்டணம் பேலியாகொடையில் இருந்து கட்டுநாயக்க வரையிலான...

அக்டோபர் 19, 2013

புலி ஆதரவாளரிடம் இலங்கை போர் குறித்த ஐக்கிய நாடுகள்

இலங்கை போர் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீளாய்வு அறிக்கை, தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர் ஒருவரிடம் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிக் கட்ட போரின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணிகள் தொடர்பிலான இந்த மீளாய்வு அறிக்கையும் பரிந்துரைகளும் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனினும், இந்த ஆவணம் புலி ஆதரவாளரான அமெரிக்காவைச் சேர்ந்த ரசல் லீ என்பவருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான...

அக்டோபர் 17, 2013

விபச்சாரிகளை அதிகம் நாடும் ஆண்கள்!

 சிறிலங்காவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்கள் நாள்தோறும் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எச்.ஐ.வீ. தவிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் 35,000 முதல் 40,000 பெண் பாலியல் தொழிலாளிகள் சேவையாற்றி வருகின்றனர். பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எயிட்ஸ் நோய் அதிகம் பரவும் ஐந்து நாடுகளின் வரிசையில்...

அக்டோபர் 16, 2013

அபாயம் மீண்டும் தாக்குதலுக்கு தயராக இருங்கள் தளபதி

அண்மையில் தமிழர் தாயகப் பகுதியில், சிறிலங்கா அரசாங்கம் நடத்திய தேர்தலில் மஹிந்த அரசாங்கம் படுதோல்வியை சந்தித்திருந்தது. இந்த படுதோல்வியானது சிறிலங்கா இராணுவத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழர் தாயகப் பகுதிக்கான தனது விஜயத்தினை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயாரத்நாயக்க, மாகாண சபைத் தேர்தலின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

அக்டோபர் 15, 2013

முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஞானசீலன் குணசீலன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகிய இருவரும் இன்று முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் கொழும்பில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் கடந்த வாரம் நிகழ்ந்த சத்தியப் பிரமாண வைபவத்தில் அவர் கலந்து கொள்ளாமைக்கு அவரது மனைவி விபத்தில் சிக்கியதும், கட்சி தலைவரின் இரட்டை நிலைபாடுமே காரணம் என தகவல்கள் வெளிவந்தன. எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைபாடுகளில் உள்ள உறுதியையும் முதல்வரிடம் அவர் வெளிப்படுத்தினார்....

அக்டோபர் 11, 2013

மாலதியின் 26 ம் ஆண்டு நினைவு நாள்

2ம் லெப்டினண்ட் தாய் மண்ணுக்காக சமராடி வீரப் பெண்ணாக வீர காவியம் அடைந்த தமிழீழத்தின் முதல் வீராங்கனையான 2ம் லெப். மாலதியின் 26ம் ஆண்டு நினைவு நாள் யேர்மனி பேர்லின் நகரில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. ஈகைச் சுடரேற்றப்பட்டு தொடர்ந்து சுடர்வணக்கவேளையில் மக்களால் அக வணக்கம், சுடர்வணக்கம் செலுத்தப்பட்டது. மாலதியின் வீரத்தையும் தியாகத்தையும் தமிழீழப் பெண்களின் தலை நிமிர்வையும் நெஞ்சில் தாங்கியபடி  மக்கள் மற்றும் மேஜர் பாரதி கலைக் கல்விக்கூட...

அக்டோபர் 08, 2013

வெற்றியுடன் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடாது -

இந்தியாவுக்கு விளக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதுடன் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டன என்று எண்ணிவிடக் கூடாது என இந்தியாவுக்கு எடுத்து விளக்கியுள்ளது கூட்டமைப்பு.இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடனான சந்திப்பின்போதே இதுகுறித்து விளக்கப்பட்டது. இரு நாள் பயணமாக நேற்று நண்பகல் இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பலதரப்பினரையும்...

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சல்மான் குர்ஷித்திற்குமிடையே ??

  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.   &nbs...

அக்டோபர் 07, 2013

அதிரடியான பாணியல் அல் கொய்தா தலைவர் கைது

 இஸ்லாமிய ஆயுததாரிகளை இலக்குவைத்து அமெரிக்க விசேட அதிரடிப் படை ஆபிரிக்காவில் இரு வேறு இரா ணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதில் 1998 ஆம் ஆண்டு கென்யா மற்றும் தன்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் அல் கொய்தா தலைவரை அமெரிக்க அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர். அனஸ் அல் லிபி என்ற அல் கொய்தா தலைவர் லிபிய தலைநகர் திரிபோலியில் வைத்து சிக்கியுள்ளார். அதேபோன்று அல் ஷபாப் ஆயுதக் குழுவை இலக்குவைத்து...

அக்டோபர் 06, 2013

முதலமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

                              வடமேல் மாகாண, மத்திய மாகாண முதலமைச்சர்கள் சென்ற 03.10.2013 பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். மத்திய மாகாண சபை முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்கவும், வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக தயாசிரி ஜயசேக்கரவும் பதவிப் பிரமாணம் அன்றைய தினம் சுபவேளையில் செய்துகொண்டனர். அவ்வவ்...

அக்டோபர் 05, 2013

இறுதி முடிவு விக்னேஸ்வரனின் கையில்..!

  வடக்கு மாகாணசபை அமைச்சர்களின் நியமனம் தொடர்பான, இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்துள்ளதாக, கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்தமாதம், 21ம் நாள் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், வெற்றிபெற்று இரண்டு வாரங்களாகியும், மாகாண அமைச்சர்களைத் தெரிவு செய்வதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இழுபறிநிலை இருந்து வருகிறது. மாகாண அமைச்சர்களாக...

அக்டோபர் 04, 2013

இனவாதத்தை தூண்டுகின்றது மஹிந்த அரசாங்கம் -

இலங்கை வரலாற்றில் இதுவரைக்கும் ஆண்ட எந்தவொரு அரசாங்கமும் மஹிந்த அரசாங்கம் போன்று படுமோசமாக இனவாதத்தை தூண்டவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார். மேலும், மஹிந்த அரசின் ஊழல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. எனவே இந்த மோசடிமிக்க அரசை கவிழ்க்க வேண்டிய காலம் வந்துள்ள நிலையில் எதிர்க்கட்சி இன்று பலவீனமாக காணப்படுகின்றது. எதிர்க்கட்சி பலமானதாக செயலுருவமுற்று இவ்வினவாத அரசை கவிழ்க்க அனைத்து...

அக்டோபர் 02, 2013

தரம் குறைந்த எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை?

 மீண்டும் மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. 15000 டொன் பெற்றோல் அடங்கிய எரிபொருள் கப்பலொன்று இவ்வாறு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து 90 ஒக்ரேன் ரக பெற்றோல் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சய்னா ஒயில் என்ற நிறுவனம் குறித்த பெற்றோலை இறக்குமதி செய்துள்ளது. எனினும், இந்த பெற்றோல் உரிய தரத்தை கொண்டமையவில்லை என முத்துராஜவல எரிபொருள் ஆய்வு கூடத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்....

தேர்தல் காலத்தில் தனி பொலிஸ் அணியை கொண்டிருப்பேன்

இனிமேல் தேர்தல்கள் நடக்கும்போது தனது கட்டளையை செயற்படுத்தவல்ல தனி பொலிஸ் அணியை தான் கொண்டிருப்பேன் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் சமயத்தில் தனது கட்டுப்பாட்டில் பொலிஸ் அணியை வைத்திருக்கும் ஆற்றலை ஆணையாளர் வெளிப்படுத்தியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதியான சுனில் வட்டகல இந்த சந்திப்பின்போது எடுத்துரைத்துள்ளார்....