18

siruppiddy

அக்டோபர் 16, 2013

அபாயம் மீண்டும் தாக்குதலுக்கு தயராக இருங்கள் தளபதி


அண்மையில் தமிழர் தாயகப் பகுதியில், சிறிலங்கா அரசாங்கம் நடத்திய தேர்தலில் மஹிந்த அரசாங்கம் படுதோல்வியை சந்தித்திருந்தது.

 இந்த படுதோல்வியானது சிறிலங்கா இராணுவத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 இந்நிலையில் தமிழர் தாயகப் பகுதிக்கான தனது விஜயத்தினை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயாரத்நாயக்க, மாகாண சபைத் தேர்தலின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 சிறிலங்காவை பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால், இராணுவம் அதனைத் தடுக்க - பதிலடி கொடுக்க - எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 இராணுவத் தளபதியாகப் பொறுப்பெடுத்த பின்னர் தமிழர் தாயகப் பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள இராணுவ தளபதி, யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினருடனான சந்திப்புக்களை முடித்துக் கொண்டு வவுனியா மாவட்டத்துக்குச் சென்றிருந்தார். 

 வன்னிப்பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,  

 "சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பதுங்கு குழிகளில் இருக்கும் போது எமக்கு எதிரான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டனர்.  அத்துடன் இராணுவத்தினரை நோகடிக்கும் செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்தனர். அப்போதெல்லாம், எமது இராணுவத்தினர்  மிகவும் அமைதியாகவும் பக்குவமாகவும் செயற்பட்டனர்.  

 அதன் பின்னர் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது, எமது இராணுவத்தினர் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு நாட்டுக்கான பணியை மேற்கொண்டு பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தனர்.  

 இதன் பின்னர் இடம்பெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் அரசு தோல்வியடைந்தது. மக்களுக்காக இராணுவத்தினர் பெரும் சேவைகளை செய்த போதிலும் அரசுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்தனர்.  

 ஆனால் நாம் அரசியலுக்கு அப்பால் இந்த நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டுள்ளோம் என்பதில் பெருமையடைகின்றோம்.  

 தேர்தலின் பின்னர் இராணவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறான நிலை ஏற்பட்டு நாடு பிளவுபடும் நிலைமை தோன்றினால் எமது இராணுவம் அதனைத் தடுக்க தயாராக இருக்க வேண்டும்.  

 இராணுவத்தினருக்கு உள்ளே இருக்கும் சிலரும் சூழ்ச்சிகள் மூலம் குழுப்பங்களை ஏற்படுத்த சிலர் முற்படுவர். எனவே படையினர் அனைவரும் விழிப்பாக செயற்பட வேண்டும்" என சிறிலங்கா இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.  

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக