மீண்டும் மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. 15000 டொன் பெற்றோல் அடங்கிய எரிபொருள் கப்பலொன்று இவ்வாறு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து 90 ஒக்ரேன் ரக பெற்றோல் இவ்வாறு இறக்குமதி
செய்யப்பட்டுள்ளது. சய்னா ஒயில் என்ற நிறுவனம் குறித்த பெற்றோலை இறக்குமதி செய்துள்ளது. எனினும், இந்த பெற்றோல் உரிய தரத்தை கொண்டமையவில்லை என முத்துராஜவல எரிபொருள் ஆய்வு கூடத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதே கப்பலில் 95 ஒக்ரேன்
ரகத்தைச் சேர்ந்த 5000 தொன் பெற்றோல் தருவிக்கப்பட்டதாகவும் அதன் தரத்தில் எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கறுப்புப் பட்டியல் இடப்பட்ட நிறுவனங்களிடமிருந்து தரம் குறைந்த
எரிபொருட்களை கொள்வனவு செய்த காரணத்தினால் கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஒன்பது பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக