இனிமேல் தேர்தல்கள் நடக்கும்போது தனது கட்டளையை செயற்படுத்தவல்ல தனி பொலிஸ் அணியை தான் கொண்டிருப்பேன் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற
கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் சமயத்தில் தனது கட்டுப்பாட்டில் பொலிஸ் அணியை வைத்திருக்கும் ஆற்றலை ஆணையாளர் வெளிப்படுத்தியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதியான சுனில் வட்டகல இந்த சந்திப்பின்போது எடுத்துரைத்துள்ளார்.
எதிர்கால தேர்தல்களில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் அரச சொத்துகளை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தனியான பொறிமுறையை ஏற்படுத்த போவதாகவும் மஹிந்த தேசப்பிரிய உறுதியளித்துள்ளார். சில அரச நிறுவன அதிகாரிகள் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி தமக்கு
விருப்பமான வேட்பாளர்களின் பயன்பாட்டுக்காக வழங்கியதாகவும் இக் கூட்டத்தில் பேசப்பட்டது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் இனிவரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஆணையாளர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக