18

siruppiddy

ஏப்ரல் 30, 2015

மரண தண்டனையின் பின்னணியில் பரபரப்புத் தகவல்?

அவுஸ்திரேலிய பொலிஸாரின் துப்பறியும் தகவல் இந்தோனேசியாவிற்கு கிடைந்ததே மயூரன்- அன்ட்ரூசான் உட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் காரணமென தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலிய மத்திய பொலிஸார், தமது நாட்டில் அவர்களது குற்றச் செயலைத் தடுத்து நிறுத்தாமல் விட்டதுடன், அவர்கள் இந்தோனேசியாவிற்குச் சென்ற பின்னர் அந்நாடு மரண தண்டனையை வழங்குகிறது என்று தெரிந்தும் அந்நாட்டுக்கு இவர்கள் பற்றி தகவல்களை வழங்கியிருந்தது. மயூரன்- சான் உட்பட ஏனையவர்களின் மரணத்தில்...

ஏப்ரல் 29, 2015

தொலைபேசியில் பசிலய் விடுதலை செய்யுமாறு அச்சுறுத்தல்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு சிறைச்சாலைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு தொலைபேசி ஊடாக இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் இது குறித்து பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரகதி லக்மினி அபேநாயக்கவிடம் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 26ம் திகதி 4.25 மற்றும் 4.30 மணிகளில்...

நேற்று பாராளுமன்றத்தில் இந்த சம்பவம் நடந்தது

யாழ்.மக்களை வாக்களிக்கவிடாமல் தடுக்ககூறியது யார்?: விமலை மடக்கிய ரணில்! கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்கவிடாமல தடுக்குமாறு பொலிஸ் அதிகாரிகளிற்கு உத்தரவிட்டது யார் என விமல் வீரவன்சவை பார்த்து கேட்டு, அவரை வாயடைக்க வைத்துள்ளார் ரணில்.  நேற்று பாராளுமன்றத்தில் இந்த சம்பவம் நடந்தது. நேற்று எம்.பிக்களின் சிறப்புரிமை தொடர்பான சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது உரையாற்றிய விமல், எதிர்க்கட்சி உறுப்பினர்களை வேட்டையாட பொலிஸ்...

ஏப்ரல் 28, 2015

வான் கும்பல் தொடர்பில் இரகசிய அறிக்கை!

வெள்ளை வான் கும்பல் தொடர்பில் இரகசிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்பு செயற்பட்டாளர்கள் கடத்தி காணாமல் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பாதுகாப்பு துறைசார் பிரதானிகள் மூவர் பற்றிய இரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரத்தில் இந்த அறிக்கை பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி,...

ஏப்ரல் 27, 2015

யோசித ராஜபக்ச சிராந்தி ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவையும், மகன் யோசித ராஜபக்சவையும், அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிராந்தி ராஜபக்சவுக்கு எதிராகவும், யோசித ராஜபக்சவுக்கு எதிராகவும், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஏற்கனவே  விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், அடுத்த சில நாட்களுக்குள் இவர்கள் கைது செய்யப்பட...

ஏப்ரல் 26, 2015

பணியாளர்கள் மக்களிற்கே விசுவாசமாக இருக்கவேண்டும்!!!

யாழ்.மாவட்டத்தினில் முன்னர் இருந்த நிர்வாகத்தில் இடம்பெற்ற ஊழல்களையும் புதிய அரச அதிபர் சரி செய்ய வேண்டும். இதனூடாக யாழ்ப்பாணத்தில் சிறந்த நிர்வாகம் ஒன்றினையே நாம் அரச அதிபர் ஊடாக எதிர்பார்க்கின்றோம்.   நாங்கள்  கொழும்பிலும், வடக்கிலும் எவ்வாறானதொரு காத்திரமான நல்லாட்சியை எதிர்பார்க்கின்றோமோ அதேபோல யாழில் சிறந்த நிர்வாகம் அமைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரன். பொருளாதார...

ஏப்ரல் 22, 2015

பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமிக்க வேண்டும் - கோத்தாபய !!!

நாட்டைக் காப்பாற்றுவதற்கு, சிறிலங்கா அதிபர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். “மைத்திரிபால சிறிசேன அதிபராக ஆறு ஆண்டுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் அதனைத் தொடர வேண்டும். ஆனால், அவர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, மகிந்த...

ஏப்ரல் 21, 2015

விசாரனக்கு மகிந்தவை அழைக்கக்வேண்டாம் ஆதரவு தெரிவித்து உறுப்பினர்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக அழைக்கக்கூடாதென வலியுறுத்தி, மகிந்த ஆதரவு அணி நடத்தி வரும் போராட்டங்களின் ஒரு அங்கமாக, மகிந்தவிற்கு ஆதரவாக 114 உறுப்பினர்களின் கையெழுத்திட்டு கடிதமொன்றை கொடுத்துள்ளனர்.  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

ஏப்ரல் 20, 2015

ஜனாதிபதிக்கும் சகோதரர்களுக்கும் எதிரான விசாரணை வாரம்???'

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏப்ரல் 24-ம் திகதி வெள்ளிக்கிழமையும் அவருடைய சகோதரரான முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ 22-ம் திகதி புதன்கிழமையும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக் குழுவுக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க செய்திகள் கூறுகின்றன.  இதே நேரம் மஹிந்தவின் மற்றுமொரு சகோதரனான பசில் ராஜபக்ஷ 21-ம் திகதி அமெரிக்காவில் இருந்து இலங்கை வரவுள்ளார். நீதிமன்ற அழைப்பாணைக்கு ஏற்ப இலங்கைக்கு வந்தவுடன் இரகசிய...

ஏப்ரல் 18, 2015

பான்கிமூனுக்கு 19வது திருத்தத்தில் வரவேற்பு!!!

 இலங்கை அரசமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக  அரசு இதுவரையில் தகவல்களை வெளியிடவில்லை. எனவே, அது தொடர்பில் விவரங்கள் வெளியான பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளியிட முடியும் என்றும்  அவர் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கை விவகாரம் தொடர்பாக...

ஏப்ரல் 16, 2015

ஒரே ஒருமுறை மாத்திரமே நெருங்க முடிந்தது -தலைவர் வே.பிரபாகரனின் மறைவிடத்தை -கேணல் ஹரிகரன்!!!

தனக்குத் தெரிந்தவரையில், இந்திய அமைதிப்படையினரால், ஒரே ஒருமுறை மாத்திரமே, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்க முடிந்ததாகவும், ஆனால் அவர் அதற்கு முன்னரே தப்பிவிட்டதாகவும், இந்திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக  இருந்த கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போதைய இந்திய வெளிவிவகார இணை அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங், நேற்று முன்தினம் ராய்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில்...

ஏப்ரல் 14, 2015

புத்தாண்டு அழைப்பு இராணுவ சூழல் அற்ற வாழ்வே வேண்டும்!!!

மலரும் புத்தாண்டில் எம்மை சுதந்திரம் அற்ற மனிதக்கூட்டமாக செயற்படவைத்து எம்மைச்சுற்றி இராணுவச்சூழலைத் தொடர்ந்து வைத்திருப்பதை இனியாவது நீக்கவேண்டும் அழைப்பு விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.  யாழ்.இந்தியத் தூதரகமும், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடத்திய புத்தாண்டு இசை நிகழ்வு நேற்று நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு...

ஏப்ரல் 09, 2015

ஜூன் இறுதியில் போர்க் குற்ற விசாரணை பற்றிகூறுகிறேன் என்கிறார் ஜனாதிபதி

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டு சம்பந்தமான விசாரணைகள் குறித்து ஜூன் மாத இறுதியில் விபரங்களை அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி அண்மையில் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, போர் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடத்தப்பட உள்ள உள்நாட்டு விசாரணைகளுக்கான முனைப்புகளை ஒரு மாதத்திற்குள்...

ஏப்ரல் 07, 2015

ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று தற்போது நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது...

ஏப்ரல் 04, 2015

செய்திகளை கசியவிடாது தடுக்க ஊடகங்களுக்கு லஞ்சம்!

 சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பான விமர்சன செய்திகளை ஊடகங்களில் கசியவிடாது தடுக்க விசேட திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பான செய்திகளை கசியவிடாது தடுக்க பிரதான ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சிலருக்கு திட்டத்தின் உரிமை நிறுவனம் லஞ்சம் வழங்கியுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த ஊடகவியலாளர்களுடன் சீன தூதரகத்தில்...

மீள்குடியமர்வு கண்துடைப்பு! மக்கள் போர்க்கொடி!!

நாலுபுறமும் இராணுவம் சூழ்ந்துள்ள நிலையினில் மக்களை குடியேற்றுவதென்பது கண்துடைப்பே.அதிலும் அவ்வாறான குடிறேற்றலிற்கு தாம் உதவப்போவதில்லையென உதவி அமைப்புக்கள் அறிவித்துள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு போர்க்கொடி தூக்கியுள்ளது. ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகள் அரைகுறை விடுவிப்புடன் கைவிடப்பட்டுள்ளது.அதனை கைவிட்டு இப்போது புதிய இடங்களை விடுவிப்பது பற்றி பேசப்படுகின்றது.விடுவிக்கப்பட்ட இடங்களில்...