18

siruppiddy

ஜூலை 31, 2015

இலங்கையில் மீண்டும் இந்திய அமெரிக்க ஆதிக்கப்போட்டியா?

உலக நாடுகளில் சுயநலமிக்க நாடுகளில் முதன்மை நாடு அமெரிக்கா. அடுத்து முதன்மை பெறுவது இந்தியா என்பது நம்பில் பலருக்கும் நன்கு தெரியும். இந்திய தேசம் அண்டை தேசம் என்பதுடன், இலங்கை தேசத்தின் தாய்த் தேசம் என்று சொன்னால் மிகைப்படுத்தலன்று. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பூர்வீக பந்தங்கள் நிறையவே உண்டு, மொழி, பண்பாடு, கலாச்சாரம், மதங்கள் என்று எடுத்து நோக்கின் அத்துணையும் இரு நாட்டையும் இணைக்கும் பாலங்கள் எனலாம்.  இந்தியாவில் ஏற்படுகின்ற அத்துணை...

பிரபாகரனை தேசியத் தலைவர் என்றே எல்லோரும் அழைத்தோம், இப்பொழுதும் அழைக்கின்றோம்.

இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நவாலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2015ம் ஆண்டின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இருதேசம் ஒரு நாடு என்ற கோசத்துடன் இத் தேர்தலில் பங்குபற்றுகிறது. எனினும் இந்த விடயத்தில் அகில...

ஜூலை 30, 2015

உரிமைகளை ஓரணியில் நிலைநாட்டுவோம்! கூட்டமைப்பு அறைகூவல்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பெருங்கூட்டங்கள் நேற்று வட்டக்கச்சியில் ஆரம்பித்துள்ளன. கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுவிஸ்கரன் தலைமையில் வட்டக்கச்சி பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வு நடைபெற்றது. காணோளிகள் இணைப்பு   .... இதில் தமிழரசுக்கட்சி தலைவரும் வேட்பாளருமான மாவை.சேனாதிராசா, வட்டக்கச்சியை பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஜூலை 28, 2015

இதுதான் காலம் பூ.சுகியின் பசி

பிச்சை எடுக்கிறேன் அப்போதும் இச்சை கொண்டுதான் பார்க்கிறார்கள்…….. பாவம் என்கிறார்கள் பாவிகள் அருகில் வந்து அழகாய் இருக்கிறாய் வருகிறாயா ? தருகிறேன் என்கிறார்கள்…… உடல் விக்க விரும்பவில்லை ஒருவேளை உணவூட்டி என் குழந்தை உயிர் காக்க விரும்புகிறேன்…….. சில சமயம் பசியின் கொடுமைதாங்கா பாவிகளின் இச்சைக்கு அடிபணிய எண்ணுவதுமுண்டு என்ன செய்வது இப்படியொரு நிலை எனக்கு தோன்றியிருக்காது போரில் என்னவர் உயிர்காக்கப்பட்டிருந்தால் ஆக்கம்...

ஜூலை 26, 2015

கைத்துப்பாக்கி உடன் மீண்டும் வெள்ளை வான்

மிரிஹான பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் வேகமாகச் சென்ற WP-JP-9244 இலக்கம் கொண்ட வெள்ளை நிற வான் ஒன்றைப் பொலிஸார் சோதனையிட எடுத்த முடிவு, பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அந்த வாகனத்தைச் சோதனையிட்ட போது, சிவில் உடையில் இருந்த மூவரில் ஒருவரிடம் இருந்து 13 ரவைகள் நிரப்பப்பட்ட, 9 மி.மீ கைத்துப்பாக்கி இருந்தமை பொலிஸாருக்கு அதிர்ச்சியளித்தது. அந்த வாகனத்தில் இன்னொரு இலக்கத் தகடு உள்ளே கழற்றி வைக்கப்பட்டிருந்தமை மற்றொரு அதிர்ச்சியை...

ஜூலை 25, 2015

ஜோதிடரின் பரபரப்பு தகவல்.ராஜபக்ஷ வெல்வார்.! ஆனால் என்ன நடக்கும்?

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவார். எனினும், அவருக்கு பிரதமராக வருவதற்கான திறமை இல்லை என்று பிரபல ஜோதிடர் நாத்தாண்டியே பி.டீ. பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவார் என்றும் அத்தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிப்பெறுவார் என்றும் இந்த சோதிடரே கூறியிருந்தார். அதேபோல, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது...

ஜூலை 24, 2015

விழிதிறவாய் நெடுந்தீவு அரவிந்தின் கவி

 ஒரு வேளை  காதல் என்ற பெயரில் காமம்  தனித்து நடுத்தெருவில் விட்டானோ? குப்பைத்தெட்டியில் பிறந்தானோ இவனை பெற்றவள் மரித்தாளோ? பெண்னை மட்டும் எப்படி குறைசொல்வது???? ஆக்கம் நெடுந்தீவு அரவிந் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

கறுப்பு ஜூலை கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின்!!!

ஆடை களைந்து நிர்வாண மாக்கி ஆண்மை அழித்தும் அறுத்தும் அக்கிரமம்..! எந்த நாட்டிலும் இல்லாத இம்சை பெண்மையின் பிறப்புறுப்பில் கைக் குண்டு..! பட்டியல் போட்டு படைகளையும் காடையர்களயும் கட்டறுத்து காட்டிய கொடுமைகள்.. மூட்டிய தீ ! முடியவில்லை மூர்க்கத் தனம். இன அழிப்பின் ஆரம்பம். வீதி ஓரங்களில் கொதிக்கும் தார் பீப்பாக்களுக்குள் பிஞ்சுக் குழந்தைகள்..! பொறுமையின் எல்லைக்கு அப்பாலும் அராஜகம் உலகம் கண்மூட உயிர்ப்புடன் உன்னதப் போர்… அகிலம்...

ஜூலை 21, 2015

உச்ச நீதிமன்றத்தில் ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம் ???

.தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தினால் போதும், அனுமதி பெறத் தேவையில்லை’ என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிக்குமார் ஆகிய ஏழு பேரும் தங்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது கடந்த...

இலங்கைத் தமிழர்கள் சயனைட் குப்பிகளுடன் கைதாம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள் (ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையினர் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தக் காரில் இருந்து, செய்மதி தொலைபேசி ஒன்று, நான்கு...

ஜூலை 19, 2015

மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்தம் மஹிந்த தரப்பை வெளியேற்ற?

மஹிந்த தரப்பை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்காக, மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த அரசியல் தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இந்த இணக்கப்பாடு இந்திய அரசாங்கத்தின் தலையீட்டில் இடம்பெறுவதாகவும் தெரியவந்துள்ளது. சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆற்றிய உரையும் இந்த இணக்கப்பாட்டுக்கு அமைய இடம்பெற்ற  ஒன்றாகும். ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் ஜனாதிபதிக்கு நெருங்கியவர்களை...

ஜூலை 17, 2015

ரவிகரனுடன் பிரித்தானிய தூதரக அதிகாரி சந்திப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய தூதரக அரசியல் செயலாளர் டோம் சோபருக்கும் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 10 மணியளவில் முல்லைத்தீவில் ரவிகரனது இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது ,கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான அரசியல் சூழல், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பற்றியும், தமிழர் தாயகத்தில் இனப்பரம்பல் கோலத்தை மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது அத்துடன் தமிழ் இளைஞகள்...

ஜூலை 16, 2015

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் நிகழ்வில் முதலமைச்சரின் சிறப்புரை!

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் ஆண்டுதோறும் நடத்தும் “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் வடமாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தாயகத்தின் இன்றைய நிலவரம் தொடர்பில்  உரையாற்றவிருக்கிறார். இந்நிகழ்ச்சி இம்மாதம் (ஜுலை) 17ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குலண்டன் ஹரோவில் உள்ள கட்வா படிடார் நிலையத்தில் ( Kadwa Patidar Centre,Kenmore Avenue,Harrow, HA3 5BD)நடைபெறவுள்ளது. வரையறுக்கப்பட்ட...

ஜூலை 12, 2015

அமைச்சருக்கும் பாதுகாப்புச் சோதனை!

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவுக்கும் உடற்பரிசோதனையை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டனர். நேற்று கொழும்பில் நடந்த ஐதேக கூட்டத்துக்கு வந்த போதே பாதுகாப்பு இராஜாங்க  அமைச்சரும் உடற்பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

அடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு மட்டக்களப்பில்!

காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. நாளை நடைபெறும் விசேட கூட்டத்திலேயே திகதி விவரம் பற்றி இறுதி  முடிவெடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார். காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது கடந்த அமர்வை திருகோணமலையில் நடத்தியது. மட்டக்களப்பில் இதற்கு முன்னரும் பொது அமர்வு நடத்தப்பட்டிருந்தது....

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா அழுத்தம்!

இனப்படுகொலை விடயத்தில் மென்மைப்போக்கை கடைப்பிடித்து வடக்கு மாகாண மக்களின் நல்லிணக்கம் தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுமாறு, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. வட மாகாண முதலமைச்சர், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்குமான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிசெயலாளர் நிசா பிஸ்வாலை சந்தித்துள்ளார்.இதன்போது...

ஜூலை 09, 2015

கைதானவர் முன்னாள் போராளி அல்ல! - மனைவியே காட்டிக்கொடுத்தார்

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் விடுதலைப்புலி உறுப்பினர் அல்ல என தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.எப்.கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில், தெல்லிப்பளை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்டவர் யாழ்.தெல்லிப்பளையைச் சேர்ந்த, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்...