தீவிரவாதம் எனக்கூறி “பிரபாகரன்” என்ற பெயரில் சிங்கள திரைப்படத்தை தயாரித்து சொத்துக்களை இழந்த சிங்கள தயாரிப்பாளர் தனக்கு நேர்ந்த நிர்க்கதி நிலைமையை விளக்கியுள்ளார்.
தீவிரவாதத்தின் கொடூரம் பற்றிய திரைப்படம் ஒன்றை தயாரித்து அதனை உலகத்திற்கு கொண்டு சென்று தனது சகல சொத்துக்களை இழந்துவிட்டதாக ரோமில் வசிக்கும் சிங்களவரான ஒஸ்மன் டி சில்வா தெரிவித்தார்.
அநுராதபுரம் ஆலங்குளத்தில் பிறந்த வளர்ந்த தான் ஜயஸ்ரீ மகாபோதி நடத்தப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்துள்ளதாகவும் அன்று மனத்தில் ஏற்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு “பிரபாகரன்” என்ற திரைப்படத்தை தயாரித்ததாகவும் அவர் கூறினார்.
அந்த படத்திற்கு தான் 175 லட்சம் ரூபாய்களை செலவிட்ட போதும் தனது கைகளுக்கு வெறும் 5 லட்சம் ரூபாவே கிடைத்தது என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
ரோமில் தனக்கிருந்த தொலைபேசி நிலையம், சில்லறை வர்த்தக நிலையம், அரைவாசி பணம் செலுத்தி கொள்வனவு செய்த வீடு, ரோமில் ஏற்பட்ட விபத்து காரணமாக கிடைத்த 50 லட்சம் இழப்பீட்டு தொகை ஆகியவற்றை தான் இந்த படத்திற்காக இழந்து விட்டதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது ரோமில் முதிய பெண்ணொருவரை பராமரித்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு வாழ்க்கை நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
{காணொளி }
0 கருத்துகள்:
கருத்துரையிடுக