வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் ஆதரவாளர்கள் இதுநாள்வரை தமது கட்சிக்கு ஆதரவு வழங்கிய ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
14:42 17.09.2013நேறறு கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
அதற்காக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.
இவர்கள் யாவருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நியமனம் வழங்கப்பட்டது என்பதினால், கட்சிக்கு தேர்தலில் வேலை சேய்ய வேண்டும் என்பது கீதாஞ்சலியின் கண்டிப்பான கட்டளையாகும்.
எனவே அனைவரும் அறிவியல் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இந்நிலையில் கூட்டத்தில் பேசிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளராக கருதப்பட்ட ஒருவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.
இவர் திட்டமிட்டுப் பேசினாரா? அல்லது தடுமாறிப் பேசினாரா என்று தெரியாமல் பிரசாரக் கூட்டததில் இருந்த ஆதரவாளர்கள் விழித்தனர்.
கூட்டம் முடிந்ததும் கிளிநொச்சி கனகபுரத்தில் உள்ள
கீதாஞ்சிலியின் நிறுவனத்திற்கு அனைவரும் அழைக்கப்பட்டனர்.
அத்துடன் குறித்த பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என்று உரையாற்றியவரை கீதாஞ்சலியின் ஆதரவாளர்கள் தனியே அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினர்.
உள்ளத்தில் உள்ளதுதான் உதட்டில் வரும் என்று தெரிவித்த ஆதரவாளர்கள், தம்மிடம் வேலை வாய்பை வாங்கி விட்டு கூட்டமைப்பை ஆதரிப்பதாகவும், இதை எதேச்சையாக கண்டு கொண்டதாகவும் கூறி குறித்த நபரைத் தாக்கியுள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக