18

siruppiddy

செப்டம்பர் 10, 2013

சிரியா இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க தயார்!


 
தங்களிடம் உள்ள இரசாயன ஆயுதங்களை சர்வதேச நாடுகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க தயார் என சிரியா அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிரியா அரசப்படைகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொன்று குவித்தது.
இதனையடுத்து அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில் சிரியா வெளியுறவு அமைச்சர் வாலித் அல்-மோவுலிம் நேற்று மாஸ்கோவுக்கு சென்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேயி லாவ்ரோவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

சிரியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க ரஷ்யா வலியுறுத்தியது. இதை ஏற்றுக் கொண்ட சிரியா அமைச்சர் வாலித், சர்வதேச நாடுகளின்

கட்டுப்பாட்டில் இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம்.
ஆனால் இதற்கு காலக்கெடு எதுவும் தர முடியாது. இது தொடர்பாக ஜெனிவா மாநாட்டில் பங்கேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம், அனைத்து அரசியல் கட்சியுடனும் பேச தயார்.

ஆனால் சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்தினால் எங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி

குறிப்பிடுகையில், சிரியா தன்னிடம் ரசாயன ஆயுதங்கள் இல்லை, அதை பயன்படுத்தவில்லை என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் பட்சத்தில் அந்நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்க முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக