எங்கள் தமிழினத்தின் கனவுகள், அபிலாசைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிப்படுத்தி நிற்கின்றது. இதனை அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பது கவலையளிப்பதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு தெற்கில் எதிர்ப்பலை வீசுவது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களின் நீண்ட காலக்கனவுகள், அபிலாசைகள், எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கியதாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தெளிவாக உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தேவையற்ற விதத்தில் பயங்கரவாதமாக மாற்றியமைத்துள்ளனர். மக்களின் உரிமையை ஏற்றுக் கொள்ளாதவர்களின் கருத்துக்களாகவே இருக்கின்றன. அரசே இந்தக் கருத்தை கூறியபோது கவலையளிக்கின்றது.
எங்கள் வரலாற்று உண்மையை நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதுடன் சரியான நேரத்தில் அது வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தை மீறாத வகையில் இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டே தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
உரிமையை மதித்து நடக்கும் போதுதான் இலங்கை முன்னேறும். அதனை விடுத்து தென்னிலங்கை மக்களை உணர்ச்சி யூட்டுவதற்காக பிழையான தகவலை வழங்கக்கூடாது என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக