இன்றைய நாள் ஸ்ரார்ஸ்பூர்க் நகரிலிருந்து புறப்பட்ட மிதியுந்து பயணம் மலைப்பிரதேசங்களினூடாக பயணித்து 74 கிலோ மீற்றர் தூரத்தினைக் கடந்து ‘வொந்தனைம்’, சவரென், பால்ஸ்பூர்க் ஆகிய நகரங்களினூடாக சார்யுனி என்ற நகரத்தைச் சென்றடைந்துள்ளது.
இவர்கள் கடந்து சென்ற நகரங்கள் அனைத்தினதும் நகர முதல்வர்களைச் சந்தித்து தமது கோரிக்கை மனுவைக் கொடுத்ததுடன், சந்திப்பையும் மேற்கொண்டுள்ளார்கள். இவர்களைச் சந்தித்த நகர முதல்வர்கள் தமிழர்களின் நிலைமையை செவியுற்றதுடன் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதுடன், தமது நண்பர்கள் மூலம் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கச் செய்வதாகவும் கூறியிருந்தனர். அத்தோடு பல ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.
ஈருறுளிப் பயணம் இறுதி நாளான 30.09.2013 அன்று பெல்ஜியம் தலைநகர் புரூசல்சிலில் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதநேய செயற்பாட்டாளர்களை தொடர்புகொள்வதற்கு,
தொ.பே.- 0033 625 90 85 93
0 கருத்துகள்:
கருத்துரையிடுக