18

siruppiddy

டிசம்பர் 26, 2014

இரகசிய ஒப்பந்தம் என அரசாங்கம் பிரச்சாரம்!!

மகிந்த வென்றாலும் ஒரு கிரிமினலாக கருதி நீதிமன்றில் வழக்குத் தொடரலாம் 20 வருட தண்டனை விதிக்கலாம் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் தொடர்பாக போலியான ஆவணமொன்றை திஸ்ஸ அத்தநாயக்கவின் உதவியுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவது ஒரு குற்றச்செயலாகும், இதன் காரணமாக அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவரை இதனை காரணம்காட்டி பதவிநீக்கம் செய்யலாம் என முன்னாள் பிரதம நீதீயரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இன்று...

டிசம்பர் 21, 2014

இளைஞர் குழு அட்டகாசம்! மக்கள் விசனம்

பொலிஸார் அசமந்தம்! யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடுகளுக்கு நள்ளிரவு கல்வீசி இளைஞர் குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளனர்.இதுகுறித்து தெரியவருவதாவது, திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீடுகளுக்கு நேற்று சனிக்கிழமை நள்ளிரவு கல் வீசியதுடன் வீட்டு கேற் மற்றும் கதவுகளையும் கால்களால் உதைந்து சுமார் அரை மணிநேரமாக அப் பிரதேசத்தில் நடமாடி அட்டகாசம் புரிந்துள்ளனர். இதனால் வீடுகளில் இருந்தவர்கள் பீதியடைந்தது...

டிசம்பர் 19, 2014

அதிக படையினர் சந்திரிக்காவின் ஆட்சியில்தான் கொல்லப்பட்டனர்

.ஒட்டுமொத்த போரிலும் கொல்லப்பட்ட 23 ஆயிரம் படையினரின் பாதிப் பேர், முன்னாள் அதிபர் சந்திரிகாவின் காலத்தில் தான், உயிரிழந்தனர் என்று, சிறிசம்புத்தலோக விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர், நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அங்கு அவர், தாமே போரின் 75 வீதத்தை முடித்து வைத்ததாக முன்னாள் அதிபர்...

டிசம்பர் 18, 2014

தமிழர்கள் 10 பேருக்கு சிறைத்தண்டனை! விதிக்கப்பட்டுள்ளது. !!

ஜேர்மனியில்  இலங்கைத் தமிழர்கள் 10 பேருக்கு   விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பத்துப் பேருக்கு ஜேர்மனியின் பெர்லின் குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெர்லின் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இரு பெண்கள் உள்ளிட்ட பத்து இலங்கைத் தமிழர்களுக்கு, ஆறு தொடக்கம் 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் என்பவருக்கு 15 மாதங்களும்,...

டிசம்பர் 13, 2014

பாலச்சந்திரன் சினிமாவாகிறது படுகொலை!!!

மீண்டும் !!தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து வீரத்தின் மகன் என்ற பெயரில் மற்றுமொரு படம் தயாரிக்கப்படுகிறது. இறுதிப்போரில் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை மையமாக வைத்து ஏற்கனவே புலிப்பார்வை என்ற படம் வெளிவந்திருந்தது.   இந்த நிலையில் தற்போது பி.ஜி;ரவீந்திரனின் இயக்கத்தில் வீரத்தின் மகன் என்று ஒரு படம் வெளிவரவுள்ளது.      இந்தப்படத்தில் அத்வைது என்ற சிறுவன் பாலச்சந்திரனாக...

டிசம்பர் 11, 2014

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கருத்து தொடர்பில் அதிருப்தி

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது அதிருப்தியைவெளியிட்டுள்ளார் அண்மையில் கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரிஹியானொன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார். இது  தொடர்பில் டொன் ரண்டல் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று அதிருப்தியை வெளியிட்டுள்ளார். போரின்போது பாரிய மனித அழிவுகள் ஏற்பட்டமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

டிசம்பர் 07, 2014

தமிழர் தொடர்பான நிலைப்பாடும் ராதிகா சிற்சபைஈசனும்!

கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனை பொறுத்தவரை 2014ம் ஆண்டு அவரைப் பிரபல்யமாக்கும் ஆண்டாக இருந்து வருகிறது. ஜனவரியில் இலங்கை விஜயத்தின் போதும், இப்போது பாராளுமன்றப் பேச்சுக் குறித்தும் அவர் பிரபல்யப்படுத்தப்பட்டார். இவ்வாறு இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆய்வாளர் திரு. சுரேஸ் தர்மா அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கனடியப் போர்வீரர்களின் நினைவு தினத்தோடு மாவீரர் தினத்தை ராதிகா ஒப்பிடுவது...

டிசம்பர் 04, 2014

சாம்பல்தீவு பகுதியில் முன்னால் போராளி ஒருவர் கைது!

திருகோணமலை, சாம்பல்தீவு பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பை சேர்ந்த ஸ்கந்தராஜா (32 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கொழும்புக்கு கொண்டுசென்று விசாரணைகளை நடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

டிசம்பர் 02, 2014

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு எதிராக மேன்முறையீடு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மேன்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைந்து கொண்ட முறை தவறானது என்று ஐரோப்பிய நீதிமன்றம் கடந்த ஒக்ரோபர் மாதம் 16ம் நாள் வெளியிட்ட உத்தரவில் கூறியிருந்தது. இந்த...

நவம்பர் 24, 2014

ஒத்தி வைக்கப்பட்டுள்ளது விடுதலைப் புலிகள் மீதான தடையின் தீர்ப்பு

இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மத்திய அரசு அவ்வப்போது நீடித்து வருகிறது. இந்த தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பாயத்தின் இறுதிகட்ட விசாரணை நேற்று டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையில் நடைபெற்றது. மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜீவ்...

ஊசலாடிய 5 தமிழக மீனவ சகோதரர்களின் உயிர் எப்படியோ

காப்பாற்றப்பட்டது என்பது ஆறுதல் அளிக்கக் கூடியதுதான்! ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையில் உண்மையான விடியல் எப்போதோ! என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,,,, இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இராஜபக்சே அரசு, தனது சொந்த நாட்டின் குடிமக்கள், சிங்கள இனம் உருவாகுமுன்பே இலங்கையை ஆண்ட வரலாற்றுப் பெருமைக்குரிய மக்கள் தமிழர்கள் என்பதையெல்லாம் “வசதியாக” மறந்தும் மறைத்தும், எம் இனத்தை அழித்து ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது....

நவம்பர் 21, 2014

அரசுக்கு அதிர்ச்சி கொடுக்கத் தயாராகும் அமைச்சர்கள்!

நாடாளுமன்றில் இன்று கட்சித் தாவல் அரங்கேறும்? ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலர் இன்று நாடாளுமன்ற அமர்வின் போது கட்சி தாவி, அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்து, இன்று முக்கியமான கட்சி தாவல் நடவடிக்கைக்கு ஆளுங்கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனை அறிந்து கொண்ட அரசாங்கத் தரப்பு உயர்மட்டத்தினர், கட்சி தாவும் முடிவில்...

நவம்பர் 12, 2014

காணாமல் போன தமிழரை அழைத்துச் செல்லுமாறு நீதிமன்றம் கடிதம் அனுப்பியது!

கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தமிழர் ஒருவரை அழைத்து செல்லும்படி ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்திலிருந்து பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. சுன்னாகம் மத்தி தேவாலய வீதியைச் சேர்ந்த க.வைரவநாதன் வயது தற்போது 53 என்பரே 1991-ஆம் ஆண்டு காணாமல் போயிருந்தார். உறவினர்களினால் மறக்கப்பட்ட நிலையில் தற்போது அவரை அழைத்து செல்லும்படி நீதிமன்றத்தில் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக உறவினர்கள் தொவித்துள்ளார்கள். 1991-ஆம் ஆண்டு...

நவம்பர் 10, 2014

வீதிகள், கோயில்கள், பல்கலைக்கழகம், பாடசாலைககளில் இராணுவத்தின்

யாழில் மாவீரர் நாள் எதிர்வரும் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு பகல் என்றில்லாது முக்கிய வீதிகள், கோயில்கள், பல்கலைக்கழகம், பாடசாலைகள் போன்ற இடங்களில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலைகொண்டுள்ளனர். இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகளால் அச்சத்துடன் நடமாடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் யாழ்.பல்கலைக்கழக வாளாக சூழலில் நவம்பர் முதாலாம் திகதி...

நவம்பர் 06, 2014

மகிந்த மகன் நாமலின் பெயரில் “ சிங்களக் கிராமத்தை உருவாக்கிறார்

வடமாகாணத்தின் முக்கிய மாவட்டம் ஒன்றில் மகிந்தராஜபக்ச, தமது மகன் நாமல் ராஜபக்சவின் பெயரில் சிங்கள கிராமம் ஒன்றை அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமல்கம என்ற பெயரில் இந்த கிராமம் அமைக்கப்படகிறது. ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனை நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார். இந்த கிரமத்தில் ஹம்பாந்தோட்டையில் இருந்து சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்படவுள்ளதுடன், அவர்களுக்கு தலா ஒரு ஏக்கர் காணிப்பரப்பும் வழங்கப்பட்டுள்ளதாக...

நவம்பர் 01, 2014

பொலிஸாருக்கு எதிராகவே ஊடகங்கள் செயற்படுகிறது!

 யாழ். குடாநாட்டு ஊடகங்கள் பொலிஸாருக்கு எதிராகவே செயற்படுவதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.பி.விமலசேன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸார் செய்யும் நல்ல விடயங்கள் தொடர்பாக செய்தி வெளியிடாமல் மாறாக பொலிஸார் விடும் சிறுதவறுகள் குறைகளை கண்டறிந்து அவற்றை பெரிதுபடுத்தி செய்தி வெளியிடப்படுகின்றது. மாநகரசபை,...

அக்டோபர் 27, 2014

கைதுசெய்யப்பட்ட நபரின் விடயத்தில் ஐ.நா தலையிட வேண்டும்

ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள 57 வயதுடைய சின்னத்தம்பி கிருஷ்ணராஜாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தலையீடு செய்து சாட்சிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சி,...

அக்டோபர் 25, 2014

வீடொன்றில் தோட்டக்களுடன் துப்பாக்கி மீட்பு

தெஹிவளை கவுடான பிரதேசத்தில் தோட்டக்களுடன் துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தமக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த துப்பாக்கியும் தோட்டக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்...

அக்டோபர் 21, 2014

பாகம்-2 யுத்தத்தின் கடைசிகட்ட நாட்களில் தலைவர் பிரபாகரன் தளபதிகளுடன் நடந்த சந்திப்பு பற்றி, கசிந்த ஓர் சுவாரசியமான தகல்..!!-

  நமக்கு தகவல் கொடுத்தவர் தொடர்ந்து பேசவிடாமல் விடுதலைப் புலிகளின் தளபதி ஜெயம் கையைப் பிடித்து தடுப்பதை கவனித்த பிரபாகரன், “அவரை தடுக்க வேண்டாம்” என்றார். “நீங்கள் சொன்ன விஷயத்தை வேறு சிலரும் சொன்னார்கள். ஆனால், நாம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் ஒற்றுமைதான் முக்கியம். எமக்கு சர்வதேசத்தின் உதவி தேவை. அப்படியொரு உதவி கிடைக்கும் என்பதற்கு சமிக்கைகள் கிடைத்துள்ளன. இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தத்தமது இஷ்டத்துக்கு ஓட...

பாகம்-1 யுத்தத்தின் கடைசிகட்ட நாட்களில்தலைவர் பிரபாகரன், தளபதி ஜெயத்துடன் நடந்த சந்திப்பு பற்றி கசிந்த ஓர் சுவாரசியமான தகல்

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் தரப்பில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய தகவல்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகின்றன. 2009-ம் ஆண்டு மே மாதம் ஆரம்பத்தில் இருந்து சிறிய பகுதியான முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் இயக்கம் முடங்கிய நிலையில், இலங்கை ராணுவம் அவர்களை முற்றுகையிட்டிருந்தது. மே 2-வது வாரத்தில், அந்த முற்றுகையை உடைத்துக் கொண்டு பிரபாகரனை வெளியே கொண்டுசெல்ல சில...

அக்டோபர் 20, 2014

மக்ளுக்கான தன்னிலைத் தீர்வுரிமை

தமிழ் மக்ளுக்கான இன்றைய தேவையான தனியரசையும் அதன் சாத்தியப்பாடுகள்,இடையூறுகள் என கொஞ்சம் அகலப்பார்வையுடன் அலசிப்பார்ப்போம் ஓர் முழமையான தேசிய இனமான நாம் நவீன தேசமாக வளர எமது சொந்தத் தேசிய அரசை அமைக்க வேண்டியது இன்றியமையாததாகும். தேசிய அரசு இன்றி மொழி,இலக்கியம்,ஏனைய இதர துறைகளிலிருந்து வளர்ச்சி அடையமுடியாது மாறாக சொந்த மக்களாலேயே புறக்கணித்து ஒதுக்கப்படும் நிலையே காணப்படும் இதுவே இன்றைய தம்ழரின் நிலை இதில் மாறுபாடான கருத்துக்கள் இருக்கமுடியாது. ஈழத்தில்...

அக்டோபர் 19, 2014

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு மகிந்த தகுதி இல்லை -

 மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்த பின்னர் 18ம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அவுஸ்திரேலிய சட்டநிபுணர் ஒருவருடன் இலங்கையின் சட்டநிபுணர்கள் கொழும்பில் நேற்று சனிக்கிழமை மாலை நடத்திய கலந்தாய்விலேயே இந்தக்கருத்துக்கள்...

அக்டோபர் 14, 2014

நிறைவேற்று அதிகாரத்திற்கும் ஈழக்கோரிக்கைக்கும் என்ன தொடர்பு?

 தனித்தமிழீழ கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று மஹிந்தராஜபக்சவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ராஜபக்ச அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது,தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சில அமைப்புக்களும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவதற்கு தாம் தயார் எனவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருவதாகவும் கூறினார் இது தொடர்பில்...

அக்டோபர் 12, 2014

ஜனாதிபதி நிறைவேற்று அதிகார முறையை ரத்து செய்கிறேன் ஈழக் கோரிக்கையை கைவிடுங்கள்,

 ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஒரு தொகுதியினரும் தமிழீழ கோரிக்கையை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்...

அக்டோபர் 09, 2014

தொடர்ந்தும் இலங்கையில் சித்திரவதைகள் - ப்ரீடம் ப்ரம் டோச்சர்

 பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சித்திரவதையில் இருந்து விடுதலை  ( ப்ரீடம் ப்ரம் டோச்சர் )  என்ற அமைப்பு இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளது. அமைப்பின் தலைவர் ஜூலியட் கொஹென் ஜெனீவா மனித உரிமைகள் குழுவின் அமர்வில் நேற்று பங்கேற்றபோது இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். எனினும் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் கரிசனை கொள்ளாது இருந்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார். இலங்கையில் தொடரும் பாலியல்...

அக்டோபர் 05, 2014

சிறையில் கொல்லப்பட்ட தில்ருக்ஷனின் வழக்கை விசாரிக்க அனுமதி

இலங்கையில் 2012-ம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட மரியதாஸ் தில்ருக்ஷன் எனும் கைதியின் மரணம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கை ஏற்கக்கூடாது என்று அரச தரப்பினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரித்தது. மரியதாஸ் தில்ருக்ஷனின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை விசாரிப்பதற்கு, பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவர்...