அரசியல் கைதிகள் என்று கைது செய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்திருப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ராவணா பலய பொளத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் கருணா,கே.பி உட்பட அனைவைரையும் கைது செய்யவேண்டும் என்றும் விடுதலை செய்யப்பட்டவர்கள் சாதாரணமானவர்கள் எனவும் கரும்புலிகள் என அறியப்படும் தற்கொலையாளிகள் எனவும்
தெரிவிக்கும்
இவ் அமைப்பு எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் கேள்வியெழுப்பி ஜனாதிபதி செயலகம் வரைசென்று அங்கு கூடியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அங்கு கருத்து தெரிவித்த ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்த சதாதிஸ்ஸ நயினாதீவின் பெயர் மாற்றப்பட்டால் கொழும்பில் ஒரு தமிழ் பெயர் கூட இல்லாமல்
அழிப்போம். என சூளரைத்த்தோடு
அரசியல் கைதிகளின் விடுதலையானது கோட்டாபய மற்றும் மஹிந்த போன்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக