பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் உறுப்பினர்கள் இன்று மட்டக்களப்பில் விசாரணை நடத்தவுள்ளனர்.
கடந்த 9ம் திகதி இலங்கைக்கு வந்த குறித்த குழு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் விசாரணைகளை நடத்தி இருந்த நிலையில், இன்று மட்டக்களப்பு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த குழு விசாரணைக்காக வரும் போது, காணாமல் போனோரின் உறவினர்கள் வாயில் கறுப்புத்துணியை கட்டி மௌனப் போராட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகவும்
கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக