18

siruppiddy

நவம்பர் 27, 2015

இன்று உலகெங்கும் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு! (காணொளி இணைப்பு )

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு உள்ளிட்டஉலகில் தமிழர் வாழும் இடங்களில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழர் உரிமைக்காக போராடி மடிந்தவர்களை நினைவுகூருவதற்காக,
 மாவீரர் நாள் 
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு 
வரப்பட்ட பின்னர், தமிழர் தாயகப் பிரதேசத்தில் மாவீரர் நாள் பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கமும் மாவீரர் தின அனுஷ்டானங்களுக்கு தடை விதித்துள்ளது. எனினும் தடைகளையும் மீறி சில தரப்பினரால் இந்த மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டு
 வருகின்றன.
 இன்றைய தினமும் மாவீரர் தின நிகழ்வுகளை அனுஸ்டிக்குமாறு வடக்கில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, மாவீரர் தின நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் புலம்பெயர் நாடுகளில் சிறப்பாக இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்
 தெரிவிக்கின்றன
. ஒவ்வொரு வருடமும் புலம் பெயர் நாடுகளில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வருடம் அதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும்
 தெரிவிக்கப்படுகின்றது.
 ஒளிதரும் தீபங்கள் கார்த்திகை தீபங்கள்( காணொளி இணைப்பு )
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக