கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் நேற்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் எடுக்க யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
குறித்த கைதிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட நிலையில் நேற்று பிற்பகல், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில்
விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டாலும் பிணை நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படாததால் மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக