விடுதலைப் புலிகளின் பெயரைக் கேட்டு எப்படி எல்லாம் பயந்து நடுங்கி இருக்கிறார் மகிந்த மற்றும் கோட்டபாய என்ற விபரங்கள் தற்போது தான் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பித்துள்ளது. அமெரிக்க நேவி சீல் பாணியில் ஒருவேளை விடுதலைப் புலிகள் விமானத்தில்
இருந்து குதித்து
அலரிமாளிகையை கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைத்தால் , அப்போது புலிகளின் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்று நினைத்த மகிந்த சில வேலைகளைச் செய்து வைத்திருந்துள்ளார். முதலாவதாக புலிகளின் விமானக் குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க சுரங்க மாளிகை ஒன்றை அமைத்துள்ளார்கள். அது போதாது என்று அங்கே இருந்து துறைமுகம் வரை செல்ல சுரக்கப் பாதை ஒன்றையும் அமைக்க திட்டம் தீடியுள்ளார்கள் என்ற தகவல் கொழும்பில் இருந்து கசிந்துள்ளது.
குறித்த சுரங்கப் பாதை ஏற்கனவே தோண்டப்பட்டது என்றும் , பின்னர் அது அவசரமாக மூடப்பட்டது என்றும் கூறப்படுகிறது. தற்போது மைத்திரி தங்கியுள்ள அலரி மாளிகையில் இருந்து துறைமுகம் வரை செல்ல வசதியாக ஒரு சுரங்கப் பாதை உள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது
. அதன் உள்
கதவுகள் மூடியவண்ணம் உள்ளதாம். ஏன் என்றால் அதன் உட்புறத்தை பிற்காலத்தில் மகிந்த & கோவினர் மூடிவிட்டார்கள். விடுதலைப் புலிகள் தம்மை எப்படி எல்லாம் தாக்குவார்கள் என்று இவர்கள் நினைத்து , கனவில் கூட ஒழுங்காக நித்திரை கொண்டு
இருக்கமாட்டார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக