18

siruppiddy

நவம்பர் 13, 2015

ஐந்தாவது நாளாகத் தொடர்ந்த உண்ணாவிரதம் கைதிகள் வைத்தியசாலையில்!

தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் அரசியல் கைதிகள் வரும் நாட்களில் மருத்துவ உதவிகளையும் புறக்கணிக்க தீர்மானித்திருப்பதாக அறிவித்துள்ளனர். அத்துடன் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளில் 19பேரின் உடல் நிலை முற்றாக பாதிப்படைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தமது விடுதலை தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் இடைநிறுத்தியிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கைதிகள் ஆரம்பித்திருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தமது விடுதலை தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எடுக்கவல்ல அதிகாரத்தை கொண்டவராக காணப்படுகின்றார். ஆகவே அவர் 
தனது நிலைப்பாட்டை
 பகிரங்கமாக அறிவித்து விடுதலைக்கான உத்தரவாதமளிக்க வேண்டும். அதுவரையில் எந்தவொரு காரணத்திற்காகவும் எமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை. எதிர்வரும் நாட்களில் மருத்துவ உதவிகளையும் முற்றாக புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக உறவினர்கள் ஊடாக தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 19 பேரின் உடல் நிலை மோசமடைந்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கே.இளங்கோ, குகநாதன், லோகநாதன், கோர்த்தனன், காந்தலேயன், பவானந்தன், தனயுகன், சிவராமன், கிருபாநந்தன், ஜெயலால்சில்வா, செந்தூரன், பார்த்தீபன், செபஸ்டியன், 
மனோகரன், 
ராஜா, ஆகிய 15பேரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் கோபிநாத், டைட்டஸ், நிஷாந்தன், விஷால் ஆகிய நால்வருமே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களாவர்.
இதேவேளை உண்ணாவிரதமிருக்கும் ஏனைய அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் சிறைச்சாலை வைத்தியர்கள் உண்ணாவிரதமிருக்கும்
 அரசியல் கைதிகளின் உடல் நிலை தொடர்பாக தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
அதேவேளை நாம் தொடந்து உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டு வரும் நிலையில் தமது கோரிக்கைகள் குறித்து இதுவரையில் எவ்விதமான உறுதிமொழிகளும் அளிக்கப்படாமை கவலையளிக்கின்றதாக தமிழ் அரசியல் கைதிகள் தமது உறவினர்கள் ஊடாக தெரிவித்துள்ளனர். பொதுமன்னிப்பளிப்பதே இறுதியான தீாவாக அமையும் என்பதை வலியுத்தும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டுமென கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக