18

siruppiddy

நவம்பர் 07, 2015

நாளை முதல் தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதத்தில்..!

சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் மஹேந்திரன் தெரிவித்தார்.
எமது இணையத்தள்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதன்படி, கொழும்பு - மகஸின் சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகள் முதற்கட்டமாக நாளை காலை முதல் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
 அதனை தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் இந்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு தொகுதி அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க 
அரசாங்கம் 
தீர்மானித்துள்ள போதிலும், அதனை தமிழ் அரசியல் கைதிகள் நிராகரித்துள்ளதாகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
பிணை வழங்குவதற்கு பதிலாக பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே இந்த கைதிகளின் கோரிக்கையாக அமைந்துள்ளது.
இதன்பிரகாரமே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுமார் 219 தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக