இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்கள் திருப்தி அளிக்கவில்லை
என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் இன்னமும் அடிப்படை பொறிமுறைமை ஒன்றை உருவாக்கவில்லை என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 10 மாதங்களாக இந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர
வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வெளிவிவகார நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ஒஸ்டின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக