சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய அரசாங்கம்
தீர்மானித்துள்ளது.
அதன்படி முதல் கட்டமாக .11.11.2015.இன்று 31 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்களை பிணையில் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது
சிறைகளில் உள்ள தமிழ் சிறைக் கைதிகள் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகளை ஆய்வு செய்து அவர்களை விடுதலை செய்வதற்கு முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 31 பேரையும் விடுதலை செய்யுமாறு கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யுமாறு அரச தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
அடுத்த கட்டமாக மேலும் 32 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இது தொடர்பாக நீதியமைச்சு மற்றும் சட்டடமா அதிபர் திணைக்களம் உட்பட அரச நிறுவனங்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்தைகளின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட சிலரை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக