18

siruppiddy

நவம்பர் 22, 2015

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க உதவும் 3 முக்கிய வழிகள்.

சர்வதேச அளவில் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், அந்த தீவிரவாத அமைப்பை கூண்டோடு அழிக்க உதவும் 3 முக்கிய வழிகளை பிரித்தானிய முன்னாள் கடற்படை தலைவர் வெளியிட்டுள்ளார்.
பாக்தாத், பெய்ரூட், சினாய் மற்றும் பாரீஸ் நகரங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த ஒரு மாதத்தில் நிகழ்த்திய கொடூர தாக்குதல்களின் விளைவாக சுமார் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக பலியாகியுள்ளது சர்வதேச நாடுகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
பாரீஸில் நிகழ்ந்த தாக்குதலுக்கு பிறகு, ‘ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஓர் அணியில் சேர்ந்து போரிட வேண்டும்’ என பிரான்ஸ் அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நேற்று ஐரோப்பிய கவுன்சில் ஒருமனதாக ஏற்றுள்ளது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு அழிவு பாதையை ஏற்படுத்தியுள்ளது என கூறினால் 
அது மிகையாகாது.
ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க பல்வேறு நாடுகள் பல திட்டங்களை வகுத்து வரும் நிலையில், பிரித்தானிய கடற்படையின் முன்னாள் தலைவரான லோர்ட் வெஸ்ட் என்பவர், ‘ஐ.எஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்க உதவும் 3 முக்கிய வழிகளை’ வெளியிட்டுள்ளார்.
1. பிரித்தானிய அரசு வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும்.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா நாடுகளின் ராணுவம் பலமாக தாக்குதலை நடத்திவரும் நிலையில், அவர்களுடன் இணைந்து பிரித்தானிய ராணுவமும் வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்த 
வேண்டும்.
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் உள்ள பெரும்பகுதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தாலும் கூட, ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பலம் குறைவாகவே
 உள்ளது.
ஈராக்கில் பிரித்தானிய ராணுவம் 350 ஐ.எஸ் தீவிரவாதிகளை ஏற்கனவே அழித்துள்ள நிலையில், இனிவரும் நாட்களிலும் தனது வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்தினால், ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை கூண்டோட அழிக்கலாம்.
அதே போல், வான்வெளி தாக்குதலில் சிரியாவில் இதுவரை ரஷ்ய ராணுவம் 800 இலக்குகளில் இருந்த சுமார் 600 ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்துள்ளது. பிரான்ஸ் ராணுவம் விதிவிலக்கிலாமல் ஐ.எஸ் தீவிரவாதிகளை கதிகலங்கடித்து வருகிறது. எனவே, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பிரித்தானிய உள்ளிட்ட கூட்டணி நாடுகள் வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்துவது அவசியமாகும்.
2.மோசூல் நகரை கைப்பற்ற வேண்டும்
கூட்டணி நாடுகளின் அடுத்த திட்டமாக ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மோசூல் நகரை கைப்பற்ற அதிரடி தாக்குதலை நடத்த வேண்டும்.
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முனைப்புடன் போராடி வரும் குர்து இனத்தை சேர்ந்த உள்நாட்டு போராளிகளின் தாக்குதல்களும் ஐ.எஸ் தீவிரவாதிகளை மேலும் பலவீனமாக்கும்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமை புலனாய்வு அலுவலகத்தை ஈராக்கில் உள்ள மோசூல் நகரில் Aljamhouri என்ற மருத்துவமனை பெயரில் நடத்தி வருவதாகவும் நம்பப்படுகிறது.
மேலும் எஸ் தீவிரவாதிகளின் முக்கிய செயல்பாட்டு தளம் என்பதால், அதனை பாதுகாக்க ஐ.எஸ் தீவிரவாதிகள் சுமார் 10 ஆயிரம் பேர் வரை நிலை நிறுத்தலாம்.
இந்த நகரை மீட்க கூட்டணி நாடுகள் தாக்குதல் நடத்தினால் பெரும்பாலான தீவிரவாதிகளை ஒடுக்கிவிடலாம்.
அதே சமயம், சிரிய அதிபரான ஆசாத்த்தின் ஒப்புதலுடன் அவருடைய ராணுவத்தையும் ஐ.எஸ் தீவிரவாத தாக்குதலில் ஈடுப்படுத்தினால், சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் மேலும் 
வலுப்பெறும்.
முக்கியமாக, சிரியாவில் தாக்குதல் நடத்தும்போது அப்பாவி பொதுமக்களும் உயிரிழக்க நேரிடும் என்பதனால், அதனை ஒரு இடற்பாடாக கொண்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் இருந்து பின்வாங்க கூடாது.
3. ராக்கா நகரை கைப்பற்ற வேண்டும்
ஐ.எஸ் தீவிரவாதிகள் உருவாக்கியுள்ள புதிய இஸ்லாமிய அரசின் தலைநகரமாக விளங்குவது சிரியாவில் உள்ள ராக்கா நகரமாகும். இங்கு தான் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பலம் அதிகமாக 
காணப்படுகிறது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமை செயலகம் இங்கு அமைந்துள்ளதுடன், இந்நகரில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஐ.எஸ் தீவிரவாதிகள் நகரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல், பல்வேறு நாடுகளை சேர்ந்த வாலிபர்களை தீவிரவாதிகளாக மாற்றி தாக்குதகளுக்கு தயார் படுத்தும் பயிற்சிகளும் இந்த நகரிலேயே அதிகமாக நடைபெற்று வருகிறது.
எனவே, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டணி நாடுகளின் தாக்குதலை ராக்கா நகரில் தீவிரப்படுத்துவதன் மூலம் அந்த அமைப்பின் அட்டூழியங்களை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஒரு வாய்ப்பாக அமையும் என பிரித்தானிய கடற்படையின் முன்னாள் தலைவரான லோர்ட் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>




இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக