18

siruppiddy

நவம்பர் 04, 2015

மஹிந்த அணியினரிடம் பிரதமர் கேள்வி???

மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களை கொலை செய்ய திட்டமிடுகின்றீர்களா? கடந்த காலங்களில் உங்கள் ஆட்சியில் கண்ட "இரத்த வெள்ளம்" போதாதா? என மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளானது தொடர்பில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதன்போது சபைக்குள் மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியின் எதிர்ப்பு கோஷங்களுடன் பதாதைகளை ஏந்தியவண்ணம் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.

இச் சந்தர்ப்பத்தின் போதே எழுந்த பிரதமர் ரணில்விக்கிரம சிங்க "மாணவர்களை கொல்லப் பார்க்கின்றீர்களா ? ரத்துபஸ்வல மூதூர் மாணவர்களின் படுகொலைகள் உங்களுக்கு போதாதா, இன்னும் உங்களுக்கு இரத்த வெள்ளம் ஓட வேண்டுமா? ஏன் சடலங்களை தேடி ஓடுகின்றீர்கள் ?

மாணவர்களை மோசமாகத் தாக்கும் அளவிற்கு பொலிஸாருக்கு பயிற்சி கொடுத்தது யார்? இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டதாக அப்போது எம்மைக் குற்றம் சாட்டிய நீங்கள் இன்று இராணுவத்தை குற்றம் சாட்டுகின்றீர்களே உங்களுக்கு வெட்கம் 
இல்லையா?" என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக