18

siruppiddy

நவம்பர் 03, 2015

இனவாதிகளுக்கு பயந்து முடிவெடுக்கத் தயங்குகிறது அரசாங்கம்!!!

விமல் வீரவன்ச, உதய கமன்பில மற்றும் குணதாச அமரசேகர போன்ற சிங்கள இனவாதிகளுக்குப் பயந்தே தமிழ் அரசியல் கைதிகளை வி்டுவிக்க அரசாங்கம் தயக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வொன்றை வழங்குவதென்ற உறுதிமொழியை ஜனாதிபதியும், பிரதமரும் காப்பாற்ற வேண்டும். இதனைக் காப்பாற்றத் தவறும் பட்ச த்தில் கைதிகளுடன் இணைந்து போராட்டத்துக்கு இறங்க 
வேண்டி ஏற்படும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 90 வீதமானவர்கள் விசாரணைகளின் போது வழங்கிய குற்றஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே அவர்களுக்கு எதிரான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் இளைஞர்களுக்காக ஆஜராகும் சட்டத்தரணி என்ற ரீதியில் கூறுகிறேன், இவர்கள் எதுவித அடிப்படையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சிறந்ததொரு உதாரணமாக சேயா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கொண்டையாவைக் கொள்ள முடியும்.
கொண்டையா என்ற நபரிடம் பலவந்தமாகப் பெற்றுக்கொண்ட ஒப்புதலின் அடிப்படையில் பொலிஸார் நடந்து கொண்டமை தெளிவாகியது. இதுபோலவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 90 வீதமானவர்கள் காணப்படுகின்றனர்.
ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர். கைதிகளைப் பார்க்கச் சென்றிருந்தபோது நான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த உறுதிமொழியை கைதிகளிடம் கூறியிருந்தோம். தாம் வழங்கிய உறுதி மொழியை அவர் நிறைவேற்ற
 வேண்டும்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவர்களுக்குப் பொதுமன்னிப்புக் கொடுத்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள் கின்றோம். ஜே.வி.பி கலவரத்தின்போது கைதுசெய்யப்பட்ட பலர் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டனர். அவர்களில் தண்டனை வழங்கப்பட்டவர்களும்
 இருந்தனர்.
2002ஆம் ஆண்டு காலப் பகுதியில் சட்டமா அதிபராக கமலசபேசன் இருந்தபோது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்ப டையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் களை விடுவிப்பதற்குத் தீர்மானிக்கப் பட்டது. அப்போது பாதுகாப்பு அமைச்சராக திலக் மாரப்பன பதவி வகித்திருந்தார். அவர் மீண்டும் சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருக்கும் நிலையில் ஏன் மீண்டும் இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் 
கேள்வியெழுப்பினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக