18

siruppiddy

நவம்பர் 07, 2015

பொலிஸாரின் வதை முகாம்- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கம்பஹா, கொட்டஹதெனிய பொலிஸாரினால் வெடிபெஹெத்வத்த என்ற இடத்தில் மேற்கொள்ளப்படும் வதை முகாம் ஒன்று குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
இந்த முகாமிலேயே சேயா சிறுமியின் சந்தேகநபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இளம் ஊடகவியலாளர் சம்மேளனம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. கொட்டஹதெனிய மக்களின் கோரிக்கைக்கு இணங்கவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டஹதெனிய பொலிஸ் நிலையத்தில் இருந்து மூன்று கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள இந்த முகாமில் சேயா கொலை தொடர்பில் சந்தேகிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட 17வயது மாணவர் உட்பட்ட 12பேர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.
சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்கள்,  நிர்வாணமாக்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் முறைப்பாட்டில் 
தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக