ஐீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளது.
மேலும் இலங்கையின் புதிய அரசாங்கம் ஊழலை ஒழிக்க, மனித உரிமையை பாதுகாக்க, நீதியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை தாம் பாராட்டுவதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியமை, வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் நிர்வாகத்தை மீண்டும் ஸ்தாபித்தமை, அரசியல் கைதிகளை விடுவித்தமை மற்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை முன்னெடுத்தமைக்கும் மதிப்பளிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை பெற்றுக் கொடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமது ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக