18

siruppiddy

நவம்பர் 26, 2015

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவர் பிரபாகரனுக்கு குவிகின்ற?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் 
வீசப்பட்டுள்ளன.
”தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 61 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்“என அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரம், விஸ்வமடு, சுண்டிக்குளம் மற்றும் கிளிநொச்சி ஊடான A9 வீதியில் வீசப்பட்டுள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தையொட்டி வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவிலான இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் 
வீசப்பட்டுள்ளன.
இறுதிக்கட்ட போர் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் பிரதேசங்களில் அதிகளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் அதனையும் மீறி பொதுமக்கள் சிலர் அந்தப் பிரதேசங்களில் அஞ்சலி செலுத்தி வருவதாகவும்  தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
தலைவர் பிரபாகரனுக்குஇந்த இணையங்களின்  பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக