18

siruppiddy

டிசம்பர் 27, 2015

இப்போ கறுப்பு வேன் வெள்ளைக்கு பதிலாக !!!

வெள்ளைவேனுக்கு பதிலாக கறுப்பு வேன் கலாசாரம் ஆரம்பம் வெள்­ளைவேன் கடத்தல் கலா­சாரம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு கறுப்பு வேன் கடத்தல் கலா­சாரம் உரு­வா­கி­யுள்­ளது. கூட்டு கட்­சி­களின் ஜன­நா­யக ஆட்­சியில் இதுவும் ஒரு அடை­யா­ளமா என மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் கேள்வி எழுப்­பினர். ஜன­நா­யகம் என்ற பெயரில் அடக்­கு­முறை அர­சாங்­கமே இன்றும் முன்­னெ­டுக்­கப்­ப­­டு­வ­தாக ஜே.வி.பி. குற்றம் சுமத்­தி­யது. மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர்...

டிசம்பர் 19, 2015

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடுகள் குறித்தும் விசாரணை?

போர்க்குற்ற விசாரணையின்போது விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திவயின பத்திரிகை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக திவயின பத்திரிகை செய்தியொன்றை பிரசுரித்துள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளுக்கு ஐந்து மேற்கத்தேய நாடுகள் நவீன ஆயுதங்களை வழங்கியிருந்தன. இந்த நாடுகளே ஜெனீவா பிரேரணையின்போது இலங்கைக்கு எதிரான...

டிசம்பர் 12, 2015

மைத்திரிக்குப் பின்னும் வெள்ளை வான்தொடர்கிறது???

இலங்கை அரசாங்கங்கள், மனித உரிமைகளைப் பேணாது தொடர்கதையாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளன. இவ்வருடம் ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் கூட, வெள்ளை வான் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை (10) நடைபெற்ற போது, அதில் மனித உரிமைகள் தினத்தையொட்டி ஆற்றிய சிறப்புரையிலே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து...

டிசம்பர் 11, 2015

முக்கிய 2 விடுதலை புலிகள் விடுதலையாகவுள்ளர் இதனால் கோட்டபாய கதறல் !

நல்லிணக்க அடிப்படையில் , மைத்திரி அரசானது 2 முக்கிய விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை விடுதலை செய்ய உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள். இதேவேளை  இன்றைய தினம்  இது குறித்து கோட்டபாய ராஜபக்ஷவும் கவலை வெளியிட்டுள்ளார். விடுதலையாக உள்ள முக்கிய புலிகள் உறுப்பினர்களின் மொறிஸ் என்னும் நபரும் அடங்குகிறார். இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது....

டிசம்பர் 08, 2015

அரசியல் கைதி ஒருவர் யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம்!!!

யாழ்ப்பாணம் .சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த சிவராசா ஜெனீபன் (வயது 36) என்ற நபரே உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண மேல்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் நேற்றைய தினம் இவரது வழக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கின்...

டிசம்பர் 02, 2015

பாரிய மோசடியில் போக்குவரத்துசபை சிக்கியது???

கடந்த காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்காக 2200 பேருந்துகள் தருவிக்கப்பட்ட போது 3080 மில்லியன் ரூபா மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சந்திரஜித் மாரசிங்க இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். கடந்த காலத்தில் அசோக் லேலன்ட் நிறுவனத்தின் இருந்து 2200 பேருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பேருந்தின் CIF விலை (COST INSURANCE AND FREIGHT) விலை...

நவம்பர் 30, 2015

கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பரிசோதனை?

ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். அவர்களின் விஜயத்தின் ஒரு கட்டமாக திருகோணமலை கடற்படை முகாமிலும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற் கொண்டிருந்தனர். இதன்போது முகாமுக்குள் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் ரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதைக் கூடங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.அத்துடன் குறித்த சித்திரவதைக் கூடங்களில்...

நவம்பர் 27, 2015

இன்று உலகெங்கும் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு! (காணொளி இணைப்பு )

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு உள்ளிட்டஉலகில் தமிழர் வாழும் இடங்களில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழர் உரிமைக்காக போராடி மடிந்தவர்களை நினைவுகூருவதற்காக,  மாவீரர் நாள்  ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு  வரப்பட்ட பின்னர், தமிழர் தாயகப் பிரதேசத்தில் மாவீரர் நாள் பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கமும் மாவீரர் தின அனுஷ்டானங்களுக்கு...

நவம்பர் 26, 2015

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவர் பிரபாகரனுக்கு குவிகின்ற?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள்  வீசப்பட்டுள்ளன. ”தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 61 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்“என அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரம், விஸ்வமடு, சுண்டிக்குளம் மற்றும் கிளிநொச்சி ஊடான A9 வீதியில் வீசப்பட்டுள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவிக்கின்றார். புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தையொட்டி...

நவம்பர் 24, 2015

கந்தசாமி கோயில் பற்றி பாதுகாப்பு தரப்பு குற்றச்சாட்டு மறுக்கும் கோயில்களின் பணிப்பாளர்.

கனடாவில் அமைந்துள்ள முன்னணி இந்துக்கோயிலான கந்தசாமி கோயில், விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கனடாவின் நெசனல் போஸ்ட் தகவலின்படி கனேடிய எல்லைப் பாதுகாப்பு சேவை நிறுவனம் இது தொடர்பில் பிராந்திய நீதிமன்றம் ஒன்றில் அறிக்கையை அளித்துள்ளது. கிழக்கு எல்லை டொரன்டோவில் அமைந்துள்ள இந்த கோயில், கனடாவில் பயங்கரவாத தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்பு என்று கூறப்படும் உலக தமிழர் இயக்கத்தின்...

அமெரிக்கா ஜெனிவா தீர்மான விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் மீது அதிருப்தி!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்கள் திருப்தி அளிக்கவில்லை  என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் இன்னமும் அடிப்படை பொறிமுறைமை ஒன்றை உருவாக்கவில்லை என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,...

நவம்பர் 22, 2015

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க உதவும் 3 முக்கிய வழிகள்.

சர்வதேச அளவில் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், அந்த தீவிரவாத அமைப்பை கூண்டோடு அழிக்க உதவும் 3 முக்கிய வழிகளை பிரித்தானிய முன்னாள் கடற்படை தலைவர் வெளியிட்டுள்ளார். பாக்தாத், பெய்ரூட், சினாய் மற்றும் பாரீஸ் நகரங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த ஒரு மாதத்தில் நிகழ்த்திய கொடூர தாக்குதல்களின் விளைவாக சுமார் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக பலியாகியுள்ளது சர்வதேச நாடுகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பாரீஸில்...

நவம்பர் 19, 2015

ஒரு தமிழ் பெயர் கூடகொழும்பில் இல்லாமல் அழிப்போம்!

அரசியல் கைதிகள்  என்று கைது செய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்திருப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ராவணா பலய பொளத்த அமைப்பு  தெரிவித்துள்ளது. அத்துடன் கருணா,கே.பி  உட்பட  அனைவைரையும் கைது செய்யவேண்டும் என்றும் விடுதலை செய்யப்பட்டவர்கள் சாதாரணமானவர்கள் எனவும் கரும்புலிகள் என அறியப்படும் தற்கொலையாளிகள் எனவும்  தெரிவிக்கும்  இவ் அமைப்பு எந்த நம்பிக்கையின் அடிப்படையில்...

நவம்பர் 17, 2015

ஐரோப்பிய ஒன்றியம்இலங்கைக்கு பாராட்டு

ஐீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளது. மேலும் இலங்கையின் புதிய அரசாங்கம் ஊழலை ஒழிக்க, மனித உரிமையை பாதுகாக்க, நீதியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை தாம் பாராட்டுவதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியமை, வடக்கு மற்றும் கிழக்கில் சிவில்...

நவம்பர் 14, 2015

இன்று மட்டக்களப்பில் ஐ.நா செயற்குழு!!!

 பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் உறுப்பினர்கள் இன்று மட்டக்களப்பில் விசாரணை நடத்தவுள்ளனர்.  கடந்த 9ம் திகதி இலங்கைக்கு வந்த குறித்த குழு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.  ஏற்கனவே மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் விசாரணைகளை நடத்தி இருந்த நிலையில், இன்று மட்டக்களப்பு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில் இந்த குழு விசாரணைக்காக...

நவம்பர் 13, 2015

ஐந்தாவது நாளாகத் தொடர்ந்த உண்ணாவிரதம் கைதிகள் வைத்தியசாலையில்!

தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் அரசியல் கைதிகள் வரும் நாட்களில் மருத்துவ உதவிகளையும் புறக்கணிக்க தீர்மானித்திருப்பதாக அறிவித்துள்ளனர். அத்துடன் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளில் 19பேரின் உடல் நிலை முற்றாக பாதிப்படைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தமது விடுதலை தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் இடைநிறுத்தியிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த...

நவம்பர் 12, 2015

விடுவிக்கா படவிருந்த இருந்த அரசியல் கைதிகள் மீண்டும் சிறைச்சாலைக்குள்

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் நேற்று  புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் எடுக்க யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். குறித்த கைதிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட நிலையில் நேற்று பிற்பகல், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில்  விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், குறித்த கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டாலும்...

நவம்பர் 11, 2015

இன்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம்?

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய அரசாங்கம்  தீர்மானித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக .11.11.2015.இன்று 31 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்களை பிணையில் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது சிறைகளில் உள்ள தமிழ் சிறைக் கைதிகள்...

நவம்பர் 07, 2015

நாளை முதல் தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதத்தில்..!

சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் மஹேந்திரன் தெரிவித்தார். எமது இணையத்தள்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதன்படி, கொழும்பு - மகஸின் சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகள் முதற்கட்டமாக நாளை காலை முதல் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  அதனை தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில்...

பொலிஸாரின் வதை முகாம்- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கம்பஹா, கொட்டஹதெனிய பொலிஸாரினால் வெடிபெஹெத்வத்த என்ற இடத்தில் மேற்கொள்ளப்படும் வதை முகாம் ஒன்று குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. இந்த முகாமிலேயே சேயா சிறுமியின் சந்தேகநபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இளம் ஊடகவியலாளர் சம்மேளனம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. கொட்டஹதெனிய மக்களின் கோரிக்கைக்கு இணங்கவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டஹதெனிய...